நவராத்திரி கொலு பொம்மைகள் டிப்ஸ்கள்…

 

*கொலு பொம்மைகள் கொஞ்சம் பழசாக இருந்தால் அந்த பொம்மைகளின் காது கழுத்து கைகளில் கலர் கலரான கற்களை பசை கொண்டு ஒட்டி விட்டால் பழைய பொம்மைகள் புதுசு போல பளபளக்கும்.

*கொலுப்படிகளில் சிறிய பொம்மைகள் நிலையாக நிற்க படிகளில் வட்ட வடிவ தெர்மகோலில் நடுவில் துளை போட்டு நிறுத்தி விட்டால் கீழே விழாது.

*கொலுவில் மலை செய்ய ஒரு காலி பானையை கவிழ்த்து வைத்து மண்ணால் மூடினால் மலை உருவாகி விடும்.

*கொலுப்படிகளின் விளிம்புகளில் தங்க நிற சரிகைகளை பின் கொண்டு பதிய வைத்தால் பளபளப்பாக இருக்கும்.

*கொலுவில் மிகச் சிறிய பொம்மைகளை பெரிய பொம்மைகளுக்கு நடுவில் இரண்டு மூன்று பொம்மைகளாக வட்ட வடிவில் ஒரு பூப்போட்ட பிளாஸ்டிக் தட்டில் பெவிகுயிக் கொண்டு ஒட்டி நிறுத்தி விட்டு வைத்தால் வித்தியாசமாக இருக்கும்..

*கொலுவில் யானை பொம்மை வைத்து இருந்தால் யானையின் முதுகில் பட்டு ஜரிகையை போட்டு விடுங்கள். துதிக்கையில் கற்கள் ஒட்டி விட்டால் பளபளப்பாக மின்னும்.

*கொலுவில் உள்ள பெண் பொம்மைகளுக்கு ஆரி ஒர்க் ப்ளவுஸில் சிறிய துணிகள் இருந்தால் சட்டை போல பின் பண்ணி விட்டால் லேட்டஸ்ட் மாடல் சட்டையுடன் பார்க்க அழகாக இருக்கும்.

*கொலு பொம்மைகள் வரிசையாக சிறிது இடைவெளி விட்டு வைத்து, நடுவில் சிறிய பிளாஸ்டிக் கலர் பந்துகளை வைத்து, பந்தின் மேல் ஒரு ஓட்டை போட்டு குச்சி நட்டு அதில் ஒரு பூவை செருகி வைத்தால் நன்றாக இருக்கும்.