ஜப்பானில் 6.9 ரிக்டர் ரஷ்யாவில் 7 ரிக்டர் அளவிலும், சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

 

ரஷ்யாவின் கம்சாத்கா தீபகற்பப் பகுதியில் சுமார் 7 ரிக்டர் அளவிலும், ஜப்பானில் 6.9 ரிக்டர் அளவிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சாத்கா தீபகற்பம் மற்றும் ஓசெர்னோவ்ஸ்கி நகருக்கு வடகிழக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் சுமார் 7 ஆகவும் சில இடங்களில் 6.9 ஆகவும் பதிவாகியுள்ளது. இது சுமார் 152 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஜப்பானில் குரில் தீவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆரம்பத்தில் ஜப்பான் வானிலைஆய்வு மையம் தவறுதலாக 9.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வரக்கூடும் என்று எச்சரித்திருந்தது, பின்னர் அது 6.9 என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலநடுக்கங்களைத் தொடர்ந்து ஜப்பானிலோ அல்லது ரஷ்யாவிலோ உடனடியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் இதர ஆபத்துகள் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.