மேஷ ராசி அன்பர்களே! மகிழ்ச்சியான காரியங்கள் நடக்கும் நாள். புதிய நண்பர்களின் பழக்கம் ஏற்படும். தொழில்துறையில் மிகுந்த வளர்ச்சி உண்டாகும். பங்குச் சந்தை வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பண வரவு தாராளமாக இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வடக்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும். உடன் பிறந்தவர்கள் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உயர்வு அடைவார்கள்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள்.
இன்று உங்கள் பலம்:
கேட்ட இடத்தில் எல்லாம் பணம் கிடைக்கும். உங்கள் திட்டங்களை நிறைவேற்ற நண்பர்கள் பக்க துணை உண்டு.
இன்று உங்கள் பலவீனம்:
பணம் விஷயத்தில் சற்று அலட்சியமாக இருப்பீர்கள். உடல் ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 யாரிடமும் கடினமான வார்த்தைகளை பேச வேண்டாம்.
2 பிள்ளைகளின் ஆசையை புறக்கணிக்க வேண்டாம்.
3 வேலை இடத்தில் அலட்சியமாக வேலை பார்க்க வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல்
வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! சிறப்பான செய்திகள் வந்து சேரும் நாள். தொழில் வெற்றிகரமாக நடக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரித்து முக்கிய கடன்கள் அடைபடும். சில யோகமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் தொழிலுக்கு தேவையான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்திற்கு இடையூறாக இருந்த எதிர்ப்புகள் நீங்கும். செல்வாக்கு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை பெறுவார்கள்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைவார்கள்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் பெறுவார்கள்.
இன்று உங்கள் பலம்:
வியாபாரத்தில் இருந்த குறைகளை கண்டுபிடிப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான வசதிகளை பெருக்குவீர்கள்..
இன்று உங்கள் பலவீனம்:
அவசரப்பட்டு சில முடிவுகளை எடுப்பது. தேவையில்லாமல் எரிச்சல் அடைவது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை.
2 அலுவலகத்தில் வேலையில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்.
3 அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
அதிர்ஷ்ட எண்கள்: 2,9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! செல்வாக்கு அதிகரிக்கும் நாள். வேலை மாற்றம், சம்பள உயர்வு தொடர்பான செய்தி கிடைக்கும். ஆசைப்பட்ட பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். சேமிப்புகளை மேம்படுத்துவீர்கள். கடன் சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். வெளிநாட்டிலிருந்து இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் இருந்த சிக்கல் தீரும். பிள்ளைகளின் படிப்பு விஷயங்களில் கவனம் அதிகரிக்கும். பண வரவு தேவைக்கேற்ப வந்து சேரும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை அடைவார்கள்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் பெறுவார்கள்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள்.
இன்று உங்கள் பலம்:
பொருளாதாரம் முன்னேற்றமும் பண வரவும் பக்க பலமாக இருக்கும். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகள் சாதகமாக இருக்கும்.
இன்று உங்கள் பலவீனம்:
குடும்பத்தில் அதிக நேரம் செலவிட முடியாது. அலைச்சல் காரணமாக உடல் சோர்வு அடையும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 பணப்பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2 பிள்ளைகளின் ஆசைகளை புறந்தள்ள கூடாது.
3 அலுவலகத்தில் மனதை அலைபாய விடாமல் வேலை பார்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 5 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, .
வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! நன்மைகள் அதிகம் நடக்கும் நாள். இன்று பூமி லாபம் கிட்டும். விடாமுயற்சியால் தொழிலில் அதிக வருமானம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருளாதார வரவு அதிகரிக்கும். கையில் தாராளமாக பணம் புரளும். வேலை இடத்தில் மரியாதை கூடும். அரசு வேலையில் எதிர்பார்த்த வேலை மாறுதல் கிடைக்கலாம். தெற்கு திசையில் இருந்து முக்கிய செய்தி வந்து சேரும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பூமி லாபம் அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நகை யோகம் பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: கடினமான உழைப்பும் மன உறுதியும் பக்கபலமாக இருக்கும். தேவையான நேரத்தில் நண்பர்களின் உதவி வந்து சேரும். இன்று உங்கள் பலவீனம்: உறவினர்கள் உங்கள் மனதை புரிந்து கொள்ளாமல் நடப்பார்கள். வேலை இடத்தில் சிறு சலசலப்புகள் உண்டாகலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இணையதள விளையாட்டுக்களில் ஆசைப்பட வேண்டாம். 2 வியாபார கணக்கு வழக்குகளை கவனமாக பார்க்க வேண்டும். 3 கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.
சிம்மராசி அன்பர்களே! நினைத்த காரியம் நிறைவேறும் நாள் இன்று. உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் மதிப்பு கூடும். பதவி மாற்றம் உண்டாகலாம். சிலர் வெளியூர் செல்லலாம். ஊதிய உயர்வு கிடைக்கலாம். வியாபாரத்தில் மிகுந்த லாபம் வந்து சேரும். தொழில்துறைகளில் இருந்த எதிர்ப்புகள் மறைந்து போகும். கண் திருஷ்டி சம்பந்தப்பட்ட பாதிப்பு விலகும். குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும். நண்பரிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய சித்தி அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை திறமை அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர் பயணம் நன்மை தரும். இன்று உங்கள் பலம்: எதையும் சீர்தூக்கி பார்த்து செயல்படுவீர்கள். வியாபாரத்தை அதிகரிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: உறவினர்களின் சலசலப்பு மனதிற்கு வேதனை தரும். நண்பர்களின் உதவிகள் தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 காரிலோ மோட்டார் பைக்கிலோ பணத்தை வைக்க வேண்டாம். 2 ஆன்லைன் வர்த்தகங்களில் ஈடுபட வேண்டாம். 3 அந்நியப் பெண்களிடம் நெருக்கம் காட்ட வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! சிறப்பான செய்திகள் வந்து சேரும் நாள். சொந்த ஊரில் செல்வாக்கு அதிகரிக்கும். புத்திசாலித்தனமான செயல்களில் வியாபாரத்தை அதிகரிப்பீர்கள். முதலாளியிடமிருந்து பாராட்டு கிடைக்கும். அலுவலகத்தில் முக்கிய இடம் உண்டு. வியாபார எதிர்ப்புகள் தானாக மறைந்து போகும். பொருள் வரவு போதுமான அளவுக்கு இருக்கும். வரவுகள் அதிகரிக்கும். செலவுகள் கட்டுப்படும். உங்கள் மனதை புரிந்து கொண்டு மனைவி நடப்பது மகிழ்ச்சி தரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: சாதுரியமான பேச்சால் அனைவரின் மனதையும் கவர்ந்து இழுப்பீர்கள். திட்டமிட்டு செயல்படுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: நீங்கள் நினைப்பதையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்று எண்ணுவீர்கள். சட்டென கோபப்படுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பண உத்திரவாதம் கொடுப்பதில் கவனம் தேவை. 2 காலையில் குறித்த நேரத்தில் எழுந்திருக்க வேண்டும். 3 குறித்த நேரத்தில் வீட்டுக்கு திரும்புவது முக்கியம். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! விருப்பப்பட்ட காரியங்கள் நடக்கும் நாள். மனதளவில் நம்பிக்கையும் உறுதியும் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் தொழிலுக்கு மேன்மையை கொண்டு வரும். தொழிலில் சிறப்பான லாபம் உண்டாகும். வியாபாரத்தில் வருமான உயர்வு கிடைக்கும். பொருள் வரவு அதிகரித்து கையிருப்பு கூடும். வேலை இடத்தில் நல்ல பலனை அடைவீர்கள். உங்கள் வார்த்தைக்கு செல்வாக்கு இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு மேன்மையான பலன் கிடைக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி மாற்றம் வந்து சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: வசீகரமான பேச்சால் அனைவரையும் கவர்ந்து இழுப்பீர்கள். புதிய தொழில்நுட்பத்தில் வியாபாரத்தை அணுகுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: தொழிலாளர்களின் ஒத்துழையாமை சிரமத்தை கொடுக்கும். எதிர்பாராத வேலைகள் இடையூறு ஏற்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும். 2 வெளியூர் பயணங்களில் அடுத்தவரை அதிகம் நம்ப கூடாது. 3 தொலைபேசியில் வரும் ஆசை வார்த்தைகளுக்கு மயங்க கூடாது.. அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாள். சிறந்த முறையில் வியாபாரம் நடக்கும். தொழில்துறையில் எதிர்பாராத முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வேலை இடத்தில் சில நல்ல வாய்ப்புகள் உருவாகும். அலுவலக அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும்.
விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான பலன் ஏற்படும்.
அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பொருள் வரவு கூடும்.
கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு அரசு உதவி வந்து சேரும்.
இன்று உங்கள் பலம்:
கணக்குப் போட்டு காரியத்தை முடிக்கும் மனதின்மை. வியாபாரத்தை அதிகரிக்க போடும் திட்டங்கள்.
இன்று உங்கள் பலவீனம்:
வீட்டுப் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்த இயலாத நிலை. அலைச்சல் காரணமாக ஏற்படும் உடல் சோர்வு.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 அவசியமற்ற செயல்களில் இறங்கக்கூடாது.
2 மனைவி கூறும் ஆலோசனையை காது கொடுத்து கேட்க வேண்டும்.
3 செலவுகளை கட்டுப்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 8,5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை
வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.
னுசு ராசி அன்பர்களே! சிறப்பான வாய்ப்பு தேடி வரும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தொழில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் மிகுந்த முன்னேற்றம் காணப்படும். வேலையில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான முடிவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். பொருள் வரவு அதிகரித்து கையிருப்பு கூடும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி மன நிம்மதி கிடைக்கும். பதவி மாறுதல் வேலை உயர்வு வாய்ப்பு உண்டாகும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு யோக பலன்கள் அதிகரிக்கும். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு பொருள் வரவு அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். இன்று உங்கள் பலம்: உங்கள் பேச்சுக்கு அனைவரும் மரியாதை கொடுப்பார்கள். சாமர்த்தியமான யோசனையால் தடைகளை தாண்டுவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: வேலை காரணமாக மறதி அதிகரிக்கும். சீக்கிரம் உணர்ச்சிவசப்பட்டு பேசி விடுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 சாப்பாட்டு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 வாகனங்களை நிறுத்தும்போது பூட்டி விட்டு செல்ல மறக்க வேண்டாம். 3 யாருக்கும் கடன் வாங்கி கடன் கொடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும் நாள். தொழிலில் அதிக அளவில் லாபம் கிட்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிவட்டார செல்வாக்கும் அந்தஸ்தும் அதிகரிக்கும். குலதெய்வத்தில் அருள் பரிபூரணமாக இருக்கும். தற்காலிக வேலை நிரந்தர வேலையாக மாறும். சம்பளம் அதிகரித்து மகிழ்ச்சி உண்டாகும். பணி மாறுதலும் கிடைக்கும். மனை இடம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்கு பொருள் வரவு அதிகரிக்கும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் யோக பலன் அடைவார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் நினைத்த காரியம் நடக்கும். இன்று உங்கள் பலம்: வெளிநாட்டில் இருந்து தொழிலுக்கு தேவையான செய்தி வரும். தொழில் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். இன்று உங்கள் பலவீனம்: நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று சில காரியங்களை தள்ளிப் போடுவது. மற்றவர்களை நம்பி வேலையை ஒப்படைப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அவசரப்பட்டு யாருக்கும் உறுதியளிக்கக்கூடாது. 2 எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். 3 வரவு செலவு கணக்குகளை சரிப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! முன்னேற்றகரமான செய்திகள் கிடைக்கும் நாள். மனை இடம் வாங்கும் யோகம் ஏற்படும். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். . வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகரிக்கும். கையிருப்பு கூடும். பணவரவு தாராளமாக இருக்கும். வேலை இடத்தில் மதிப்பு கூடும். பாராட்டு கிடைக்கும். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். வடக்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு கையிருப்பு அதிகரிக்கும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு தன லாபம் கூடும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு உண்டாகும். இன்று உங்கள் பலம்: தொழிலுக்கு தேவையான அனைத்தையும் திட்டமிட்டு செயல்படுத்துவது. வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியோடு செயல்படுவது. இன்று உங்கள் பலவீனம்: வீட்டு பிரச்சனையால் மனம் சற்று சஞ்சலப்படுவது. ஞாபக மறதி அதிகமாக இருப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனம் ஓட்டும்போது கவனம் சிதற கூடாது. 2 கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். 3 தொழில் கணக்கு வழக்குகளை அன்றன்று பார்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! எதிர்பார்த்த காரியம் நடக்கும் நாள். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டி வரும். குடும்பச் செலவு சற்று சிரமத்தை கொடுக்கலாம். தொழில் சிறப்பாக நடக்கும். வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகி லாபம் அதிகரிக்கும். வரா கடன் வசூலாகும். மனைவியின் அனுசரிப்பால் மனநிம்மதி உண்டாகும். பொருள் வரவு அதிகரிக்கும். குடும்பச் செலவுகள் கூடும். உறவினர்களின் அன்பு பலமாக அமையும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காரியத்தடை விலகும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வருமானம் அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்கள் உதவிகள் வந்து சேரும். இன்று உங்கள் பலம்: எதிர்ப்புகளை சாமர்த்தியமாக முறியடிக்கும் திறன் உண்டு. வெளிநாட்டிலிருந்து முக்கிய செய்தி வந்து சேரும். இன்று உங்கள் பலவீனம்: தூக்கம் இல்லாமல் வேலை இடத்தில் கவனம் சிதறுவது. அடிக்கடி தலைவலி வந்து சிரமப்படுத்துவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணப்பரிவர்த்தனையில் நிதானமாக நடக்க வேண்டும். 2 ஆசை வார்த்தைகளை நம்பி அகலக்கால் வைக்க கூடாது. 3 ஆடம்பரமாக செலவு செய்வதை தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம் தேதி 29 – புரட்டாசி – பராபவ வருடம் வெள்ளி நாள் வெள்ளி திதி சஷ்டி (up to October 17, 5:54 am) சப்தமி (up to October 18, 8:28 am) நட்சத்திரம் கேட்டை (up to 6:47 am) மூலம் (up to October 17,9:47 am) யோகம் மரண-அமிர்த யோகம் நல்ல நேரம் 9:15 – 10:15 am / 2:00 – 3:00 pm கௌரி நல்ல நேரம் 12:15 – 1:15 am / 6:30 – 7:30 pm இராகு காலம் காலை 10.30 – 12.00 எமகண்டம் மதியம் 3.00 – 4.30 குளிகை காலை 7.30 -9.00 சூலம் மேற்கு பரிகாரம் வெல்லம் சந்திராஷ்டமம் ரோகிணி சூரியோதயம் 6:03 AM சூரிய அஸ்தமனம் 5:45 PM சந்திரோதயம் Oct 16 10:41 AM சந்திர அஸ்தமனம் Oct 16 10:08 PM



