சமீபகாலமாகவே பணப்பரிவர்த்தனையில் UPI என்பது முக்கிய பங்காற்றி வருகிறது.
பொதுமக்கள் எங்கு சென்றாலும் Google Pay, Paytm, PhonePe போன்ற மொபைல் ஆப் மூலம் பணத்தை செலுத்தி விடுகிறார்கள்.
அதற்கு எந்த கட்டணமும் கிடையாது. ஆனால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக பரிவர்த்தணைகளுக்கு 0.4 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இது பொதுமக்களிடம் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், ‘பொது மக்களிடம் எந்த வரியும் பிடிக்கப்படாது.. வணிகர்களின் வங்கி கணக்கிலிருந்து அந்த தொகை பிடிக்கப்படும்’ என மத்திய அரசு விளக்கமளித்தது..
மேலும், அக்டோபர் 15ம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு கூறியிருந்தது. இந்நிலையில் வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பதை மத்திய அரசு தள்ளி வைத்திருக்கிறது. அதாவது, ஜனவரி 1ம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வரும் என மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கிறது.



