மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்-அக்டோபர்- 14-2026

 

மேஷ ராசி அன்பர்களே! நன்மைகள் அதிக அளவில் நடக்கும் நாள். பழக்கவழக்கங்களில் சில தடுமாற்றம் ஏற்படும். தொழில்துறையில் உயர்வான பலன் உண்டாகும். காப்பீட்டு துறையில் பண வரவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்பட்டு சந்தோசம் பெருகும். யோக பலன் அதிகரிக்கும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். வடக்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும். உடன் பிறந்தவர்கள் குணமாறி நடப்பார்கள். பண வரவுகளில் தடை இருக்காது. நல்ல பலன்கள் அதிகரிக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுகூலம் பெறுவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் அடைவார்கள். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் வெற்றி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: தொழிலை விரிவு செய்ய நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசாங்க உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: சாதாரணமா பேசினாலே மற்றவர்கள் காயப்படுவார்கள். அவசரப்பட்டு சில காரியங்கள் செய்வீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 மனைவி என்ன சொல்கிறார் என்பதை கவனமாக கேட்க வேண்டும். 2 பணம் வரவு செலவுகளில் மிகுந்த கவனம் வேண்டும். 3 எந்த வேலையாக இருந்தாலும் நேரம் தவறாமல் செய்ய வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி அன்பர்களே! நல்ல செய்திகள் வந்து சேரும் நாள். தொழிலில் மிகுந்த முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்து மூலம் பணவரவு இருக்கும். மந்தமாக இருந்த வியாபாரம் அதிகரிக்கும். சில யோகமான வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையார் வகையில் மருத்துவச் செலவு ஏற்படலாம். வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கும். தொழில்துறையிலிருந்த இடையூறுகள் நீங்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு அதிகரிக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பான பலன் பெறுவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இன்று உங்கள் பலம்: வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பது. எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்று துடிப்போடு செயல்படுவது. இன்று உங்கள் பலவீனம்: மேலதிகாரி உங்களை பாராட்ட வேண்டும் என்று நினைப்பது. மற்றவர்கள் செயலால் மனம் வேதனைப்படுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 மற்றவருக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனம் தேவை. 2 தேவையில்லாத செலவுகளை செய்யக்கூடாது. 3 குழந்தைகளின் தேவையை கவனமாக செய்ய வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.

மிதுன ராசி அன்பர்களே! எதிர்பார்த்த செய்தி தேடி வரும் நாள். வேலை உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். வீட்டுத் தேவை பூர்த்தி ஆகும். வருமானம் அதிகரித்து பண வரவு கூடும். வியாபாரத்தில் லாபம் கிடைத்து கையில் பணம் புரளும். நீண்ட நாள் வராத கடன் வசூலாகும். நண்பரிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். சகோதரி சம்பந்தப்பட்ட முடிவு எடுக்கும் நிலை உருவாகும். . பண வரவு உயர்ந்து கையிருப்பு கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும்.

மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை பெறுவார்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிம்மதி பெறுவார்கள்.

இன்று உங்கள் பலம்:

உங்களின் திட்டங்கள் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். சாமர்த்தியமான நடவடிக்கை நன்மை தரும்.

இன்று உங்கள் பலவீனம்:

மற்றவர்கள் விஷயத்தில் தலையிட்டு பேசுவது. பிள்ளைகளை கண்டிக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்.

2 ஜாமீன் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கை தேவை.

3 அலுவலகத்தில் வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 5 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, .

வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி அன்பர்களே! வேண்டியது கிடைக்கும் நாள். இன்று தொழில் வெற்றிகரமாக நடக்கும். வியாபாரத்தில் கடுமையான உழைப்பால் வருமானம் பெருகும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வங்கியில் வரவு செலவு சுமூகமாக நடக்கும். வேலை இடத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். அரசு வேலையில் பணிச்சுமை குறையும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளியூர் பயணங்களின் மூலம் தொழில் லாபம் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் அடைவார்கள்.

இன்று உங்கள் பலம்:

அரசியல்வாதி ஒருவரின் நட்பு உறுதுணையாக இருக்கும். பெரியோரின் ஆசி நன்மை தரும்.

இன்று உங்கள் பலவீனம்:

எதிலும் அவசரம் காட்டி செயல்படுவது. இரவு நேரம் அதிகம் தூக்கம் விழிப்பது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 கடன் கொடுக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும்.

2 உடன் வேலை பார்ப்பவர் விசயத்தில் எட்டி நிற்க வேண்டும்.

3 வாகனங்களை நிறுத்தும்போது பூட்டிவிட்டு செல்ல வேண்டும்

அதிர்ஷ்ட எண்: 8,5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள்.

வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி அன்பர்களே! வெற்றிகரமான பலன்கள் நடக்கும் நாள் இன்று. உங்களின் செல்வாக்கு உயர்ந்து நிற்கும். வேலை பார்க்கும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு உண்டாகும். சம்பள அதிகரித்து சந்தோஷம் ஏற்படும். வியாபாரத்தில் அதிக லாபம் வந்து சேரும். தொழில்துறையில் இருந்த போட்டிகள் சாதகமாக மாறும். கண் திருஷ்டி சம்பந்தப்பட்ட பாதிப்பு விலகி ஓடும். குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவி உறவு மனமகிழ்ச்சியுடன் திகழும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி அடைவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலைப்பளு குறையும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியம் மேம்படும். இன்று உங்கள் பலம்: வியாபாரத்தில் உள்ள பிரச்சனைகளை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் உதவியை பயன்படுத்துவீர்கள். இன்று உங்கள் பலவீனம்: உறவினர்களின் மறைமுக பேச்சு மனதை வருத்தும். அவசரப்பட்டு பேசி விடுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் நிதானம் தேவை. 2 ஆன்லைன் வர்த்தகத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். 3 நண்பர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி விடாதீர்கள். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும் நாள். அலுவலகத்தில் செல்வாக்கும் அந்தஸ்து உயரும். புதிய வியூகத்தில் வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். மேலதிகாரிகளின் தவறான கருத்து மாறும். எதிர்ப்புகளால் வந்த இன்னல்கள் விலகி திருப்தி பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் பண வரவை அதிகரிக்கும். கடன் சுமைகள் குறையும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உறவினர்களின் ஒத்தாசை கிடைக்கும். பெரியோர்களின் ஆசி துணையாக நிற்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை பெறுவார்கள்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி அடைவார்கள்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை பெறுவார்கள்.

இன்று உங்கள் பலம்:

இன்சூரன்ஸ் பணம் கைக்கு வந்து சேரும். நண்பர்களின் ஒத்துழைப்பு எந்த நேரத்திலும் கிடைக்கும்.

இன்று உங்கள் பலவீனம்:

குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை தூக்கும். பிள்ளைகளின் நடவடிக்கை கவலையை தரும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 கொடுக்கல் வாங்கலில் நிதானம் தவறக் கூடாது.

2 பணப்பரிவர்த்தனையில் அலட்சியம் நஷ்டத்தை தரும்.

3 ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 1,9

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் நடக்கும் நாள். மனதளவில் உறுதியும் வேகமும் ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் தொழில் உயர்வை கொண்டு வரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். ரியல் எஸ்டேட்டில் சிறப்பான உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். வேலை இடத்தில் அதிக அக்கறையுடன் செயல்பட வேண்டும். உங்கள் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும். பூமி லாபம் உண்டாகும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு புகழும் செல்வாக்கும் கிடைக்கும். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி வாய்ப்பு வந்து சேரும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இன்று உங்கள் பலம்: குடும்பத்தில் மேன்மையான பலன்கள் மன உறுதியை கொண்டு வரும். பெற்றோரின் ஆரோக்கியம் நிம்மதி தரும். இன்று உங்கள் பலவீனம்: பிள்ளைகளின் நடவடிக்கை உங்களை பலவீனப்படுத்தும். எதிர்பார்த்த காரியம் நடக்க தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆன்லைன் வர்த்தகங்களில் அவசரம் வேண்டாம். 2 அவசியமற்ற செலவுகள் செய்ய வேண்டாம். 3 மற்றவரின் கோபத்தை பெரிதுபடுத்த வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும் நாள். தொழில்துறையில் ஏற்ற இறக்கமான பலன் கிடைக்கும். வெளியிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்திற்கு இடையூறு தோன்றி மறையும். யோக பலன்கள் மிதமாக கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். வேலை இடத்தில் சில நன்மைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் கோபம் மறைந்து சுமூகமான நிலை ஏற்படும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான பலன் ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் அரசு உதவி வந்து சேரும். இன்று உங்கள் பலம்: கணக்குப் போட்டு காரியம் முடிக்க திட்டம் தீட்டுவது. அதை நடத்தும் உத்வேகத்தோடு செயல்படுவது. இன்று உங்கள் பலவீனம்: குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு மன நிம்மதி குறைவது. மற்றவர்களின் பிரச்சனையில் தேவையில்லாமல் தலையிடுவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேலை இடத்தில் கவனச்சிதறல் இருக்கக் கூடாது. 2 புதிய முதலீடுகள் செய்யும்போது நிதானமாக இருக்க வேண்டும். 3 மனைவியின் தேவையை உதாசீனப்படுத்தக் கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.

தனுசு ராசி அன்பர்களே! எதிர்பாராத நல்ல செய்தி கிடைக்கும் நாள். உழைப்பும் சுறுசுறுப்பும் தொழிலில் வெற்றியை குவிக்கும். வியாபாரத்தில் புதிய புதிய திட்டங்கள் லாபத்தை கொண்டு வரும். வேலையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளை சாதகமாக மாற்றும் ஆற்றல் உண்டு. மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு தானிய விருத்தி உண்டாகும். பூராடம் நட்சத்திரக்காரர்கள் தொழில் லாபம் அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் ஆபரண சேர்க்கை ஏற்படும். இன்று உங்கள் பலம்: ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்து காரியத்தில் இறங்குவீர்கள். வெற்றி பெற விடாமுயற்சியுடன் உழைப்பீர்கள். இன்று உங்கள் பலவீனம்: வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வராமல் மனம் சஞ்சலப்படுவீர்கள். நண்பர்களிடம் உதவி கேட்க தயங்குவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 எந்த பொருளாக இருந்தாலும் எடுத்த இடத்தில் வைக்க வேண்டும். 2 எழுதி வாங்காமல் பெரிய தொகை கொடுப்பது சிக்கலைத் தரும். 3 மனைவி ஏட்டிக்கு போட்டியாக நடக்காமல் பார்த்துக் கொள்ளவும். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

மகர ராசி அன்பர்களே! பெரியோர்களின் ஆசி கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பாராத லாப உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் குவியும். வெளிவட்டார புகழ் அதிகரிக்கும். குலதெய்வத்தில் அருள் பரிபூரணமாக இருக்கும். பதவி மாற்றம் உண்டாகும். சம்பளம் அதிகரித்து சந்தோசம் கிடைக்கும். பணி மாறுதலும் ஏற்படலாம். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். தங்க நகை வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் பொருள் வரவு கூடும்.

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நிறைவேறும்.

இன்று உங்கள் பலம்:

தாராளமாக பணம் வந்து கையில் காசு புரள்வது. அரசு உதவி கேட்டவுடன் கிடைப்பது.

இன்று உங்கள் பலவீனம்:

வேலை சுமை காரணமாக மறதி அதிகரிப்பது. புரிந்து கொள்ளாமல் வீட்டில் மனைவியை திட்டுவது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வேலை இடத்தில் வீட்டுப் பிரச்சனைகளை பேச கூடாது.

2 வருமானத்தை சேமிப்பதில் கவனம் அதிகமாக வேண்டும்.

3 உடல்பிரச்சனையை அலட்சியப்படுத்தக் கூடாது.

அதிர்ஷ்ட எண்: 9,2

அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

கும்ப ராசி அன்பர்களே! திருப்திகரமான செய்திகள் வரும் நாள். வீட்டிற்கும் உங்களுக்கும் இருக்கும் இடைவெளியை குறைப்பீர்கள். பூர்வீக சொத்துக்கள் தக்க சமயத்தில் வந்து சேரும். தொழிலில் பெரிய முன்னேற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத வருமானம் அதிகரிக்கும். பண வரவு அதிகரித்து வங்கியில் சேமிப்பு உயரும். வேலை இடத்தில் உங்கள் பேச்சுக்கு மரியாதை கிடைக்கும். விருப்பப்பட்ட இடத்துக்கு மாறுதல் வரும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலை நன்மை உண்டாகும்.

சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செல்வாக்கு ஏற்படும்.

இன்று உங்கள் பலம்:

மன உறுதியும் அறிவுத்திறனும் பக்க பலமாக நிற்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு பலத்தை கொடுக்கும்.

இன்று உங்கள் பலவீனம்:

சில முடிவுகளை அவசரப்பட்டு செயல்படுத்த நினைப்பது. தேவையில்லாமல் கோபப்படுவது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வாகனத்தில் செல்லும்போது கவனம் திசை திரும்பக் கூடாது.

2 ஆடம்பரமாக செலவு செய்வது தவிர்க்க வேண்டும்.

3 தவணை கடனை தவறாமல் கட்ட வேண்டும்.

அதிர்ஷ்ட எண்: 8,3

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள்.

வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசி அன்பர்களே! உயர்வான பலன் நடக்கும் நாள். எதிர்பாராத செலவுகள் குடும்பத்தில் வரலாம். வீட்டு செலவுக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படாது. தொழில் விறுவிறுப்பாக நடக்கும். வியாபாரத்தில் இடையூறுகள் நீங்கி வருமானம் பெருகும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் உங்கள் சாமர்த்தியம் வெற்றியை தரும். வீட்டில் மனைவியின் கோபம் மாறி மகிழ்ச்சி ஏற்படும். வாங்கிய கடனை சுலபமாக அடைக்கும் வழி கிடைக்கும். உறவினர்களின் எதிர்ப்பு மாறும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காரியத்தடை விலகும் . உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வருமானம் அதிகரிக்கும். ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு உதவிகள் வந்து சேரும். இன்று உங்கள் பலம்: மேலதிகாரி மனதில் இடத்தை தக்க வைப்பீர்கள். உங்களின் திறமையை நிரூபணம் செய்வீர்கள். இன்று உங்கள் பலவீனம்: கடினமான வேலையை அலட்சியமாக பார்க்க நினைப்பது. அடுத்தவர்கள் பேச்சை அப்படியே நம்புவது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பணத்திற்கு உத்தரவாதம் கொடுப்பதில் கவனம் தேவை. 2 பிள்ளைகளின் சந்தோஷத்தில் பங்கெடுக்க வேண்டும். 3 அலுவலகத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

இன்றைய பஞ்சாங்கம் தேதி 27 – புரட்டாசி – பராபவ வருடம் புதன் நாள் புதன் திதி சதுர்த்தி (up to October 15, 1:13 am) பஞ்சமி (up to October 16, 3:25 am) நட்சத்திரம் விசாகம் (up to 1:42 am) அனுஷம் (up to October 15,4:03 am) கேட்டை (up to October 16,6:47 am) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 9:15 – 10:15 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 10:45 – 11:45 am / 6:30 – 7:30 pm இராகு காலம் மதியம் 12.00 – 1.30 எமகண்டம் காலை 7.30 – 9.00 குளிகை காலை 10.30 – 12.00 சூலம் வடக்கு பரிகாரம் பால் சந்திராஷ்டமம் பரணி சூரியோதயம் 6:02 AM சூரிய அஸ்தமனம் 5:47 PM சந்திரோதயம் Oct 14 8:55 AM சந்திர அஸ்தமனம் Oct 14 8:26 PM