சக்திவாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கியது

 

பூமியின் காந்தப்புலத்தை ஒரு சக்திவாய்ந்த சூரியப் புயல் தாக்கியுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

சூரியனில் சன்ஸ்பாட் 4549 பகுதியில் அக்டோபர் 7ஆம் திகதி ஏற்பட்ட சூரிய காந்த புயல், 10ஆம் திகதி பூமியை தாக்கிய நிலையில், 8ஆம் திகதி உருவான இரண்டாவது காந்த புயல் ஞாயிற்றுக்கிழமை (11) பூமியை தாக்கியுள்ளது.

சூரியனில் இருந்து வெளியான இரண்டு பெரிய பிளாஸ்மா வெடிப்புகள் ஒன்றாக இணைந்து பூமியின் காந்தப்புலத்தைத் தாக்கியுள்ளது. இதனால் பூமியில் சக்திவாய்ந்த புவிக்காந்தப் புயல் ஏற்பட்டுள்ளது.

விண்வெளியில் இருந்து விநாடிக்கு 900 கிலோமீற்றர் வேகத்தில் வந்த சூரியப் புயல் பூமியை தாக்கியுள்ளதாகவும் விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சூரியப் புயலினால், வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் வானத்தில் மிக அழகான ‘ஆரோரா’ எனப்படும் விசித்திரமானப்படும் விசித்திரமான துருவ ஒளிகளும் தோன்றியுள்ளன. இது பார்க்க மிகவும் அழகானதாக விசித்திரமாகவும் இருந்துள்ளன.

சூரியப் புயலின் தாக்கத்தால் நேற்று செயற்கைக்கோள் தொடர்புகள் மற்றும் மின்சார விநியோகக் கட்டமைப்புக்களில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும் விண்வெளியில் செயற்கைக் கோள் கூட்டமைப்புக்கு லேசான தொழில்நுட்ப நெருக்கடிகளையும் தற்காலிகத் தடைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சூரிய புயலின் தாக்கத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.