மஹிந்த ராஜபக்‌ஷ போலியான உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதி

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உடல்குறைவால் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி போலியானது. வுழமையான மருத்துவ சிகிச்சைக்காகவே அவர் இன்று (12) திங்கட்கிழமை வைத்தியசாலைக்குச் சென்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப்பேச்சாளர் மனோஜ் கமகே தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ திடீர் சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உளவியல் ரீதியில் சோர்வடைந்து விட்டார். அதனால் அவர் திடீர் சுகயீனமடைந்துள்ளார் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.

மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் திட்டமிட்ட வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இதனால் மஹிந்த ராஜபக்‌ஷ தளர்வமடையவில்லை.அவர் உறுதியாகவே உள்ளார்.

உடல்குறைவால் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி போலியானது. வுழமையான மருத்துவ சிகிச்சைக்காகவே அவர் இன்றைய தினம் வைத்தியசாலைக்குச் சென்றார். அவர் சிறந்த முறையில் வீடு திரும்பியுள்ளார் என்றார்.