மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்-அக்டோபர்- 13-2026

 

மேஷ ராசி அன்பர்களே! சிறப்பான காரியங்கள் நடக்கும் நாள். பழக்கவழக்கங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். தொழில்துறையில் ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும். காப்பீட்டு துறையில் எதிர்பார்த்தது தாமதமாக நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் மறையும். பண வரவு அதிகரிக்கும். செலவுகளும் சிரமப்படுத்தும். நண்பர்களின் உதவி கிடைக்கும். வடக்கு திசையில் இருந்து ஒரு நல்ல செய்தி வரும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பண வரவுகளில் தடை நீங்கும். நல்ல பலன் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிதானமாக செயல்படவும்

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒப்பந்தங்கள் தாமதமாகும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில் மந்தமாகும்.

இன்று உங்கள் பலம்:

நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது. அலுவலகத்தில் வேலைத்திறனை அதிகப்படுத்துவது.

இன்று உங்கள் பலவீனம்:

திடீரென்று மனச்சோர்வு அடைவது. வேலையில் நீங்கள் நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைப்பது.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம்.

2 அவசியமற்ற பொருட்களை வாங்க வேண்டாம்.

3 மற்றவர்கள் பேச்சை மனதில் வைத்து குழம்ப வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல்

வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி அன்பர்களே! யோகமான செய்திகள் வந்து சேரும் நாள். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். மந்தமாக இருந்த விற்பனை அதிகரிக்கும். சில எதிர்பாராத வாய்ப்புகள் கிடைக்கும். தாய் தந்தையரின் சேமிப்பு உங்களுக்கு கை கொடுக்கும். வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். தொழில்துறையில் திடீர் யோகம் உண்டாகும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடு பலன் தரும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் லாபம் பெறுவார்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலன் அடைவார்கள். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்படைவார்கள். இன்று உங்கள் பலம்: வியாபாரத்துக்கு இருந்த இடையூறுகளை விலக்குவீர்கள். உங்களுடைய திட்டம் தொழிலை உயர்த்தும். இன்று உங்கள் பலவீனம்: மற்றவர்களின் விமர்சனங்களை தாங்க முடியாத நிலை. உறவினர்களின் தொல்லை மனதை சங்கடப்படுத்தும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கலில் சமரசம் கூடாது. 2 வேலை இடத்தில் சோம்பேறித்தனம் கூடாது. 3 பெரியவர்களின் பேச்சை அலட்சியப்படுத்தக் கூடாது. அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.

மிதுன ராசி அன்பர்களே! செல்வாக்கு அதிகரிக்கும் நாள். வேலை உயர்வு தொடர்பான முக்கிய செய்தி கிடைக்கும். அவசியமான பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. வருமானம் பெருகும். வங்கி இருப்பை மேம்படுத்துவீர்கள். கடன் சுமைகள் குறையும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பம் சம்பந்தப்பட்ட முடிவு எடுக்கும் நிலை உருவாகும். குழந்தைகளின் படிப்பு விஷயங்களில் கவனம் அதிகரிக்கும். பண வரவு உயர்ந்து கையிருப்பு கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மை பெறுவார்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு அடைவார்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிம்மதி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: உங்களின் திட்டங்கள் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். சாமர்த்தியமான நடவடிக்கை நன்மை தரும். இன்று உங்கள் பலவீனம்: தேவையில்லாத விஷயத்திலும் தலையிட்டு பேசுவது. மற்றவர்களின் பேச்சை தாங்கிக் கொள்ள முடியாத நிலை. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். 2 ஜாமீன் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கை தேவை. 3 அலுவலகத்தில் வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி அன்பர்களே! நல்லது நடக்கும் நாள். இன்று தொழில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சியால் வருமானம் பெருகும். அலுவலகத்தில் இருந்த எதிர்ப்புகள் மறையும். வங்கியில் பண இருப்பு உயரும். வேலை இடத்தில் அந்தஸ்து அதிகரிக்கும். அரசு வேலையில் எதிர்பார்த்த உயர்வு உண்டாகும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வெளியூர் பயணங்களின் மூலம் தொழில் லாபம் அதிகரிக்கும். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல பலன் பெறுவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: எதிர்பாராத இடத்திலிருந்து உங்களுக்கு பணவரவு கிடைக்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவு பலம் தரும். இன்று உங்கள் பலவீனம்: உங்களை சுற்றி இருப்பவர்களின் பொறாமை பலவீனத்தை ஏற்படுத்தும். உறவினர்கள் தொல்லை உண்டு. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 மனைவியின் கோபத்தை கவனமுடன் கையாள வேண்டும். 2 பிள்ளைகளின் மீது கண்டிப்பு அதிகம் வேண்டாம். 3 அலுவலகத்தில் சோம்பேறித்தனம் கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்.

சிம்மராசி அன்பர்களே! மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடக்கும் நாள் இன்று. உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை பார்க்கும் இடத்தில் அந்தஸ்து கூடும். பதவி மாற்றம் உண்டாகும். சம்பள அதிகரிப்பு மகிழ்ச்சிப்படுத்தும். வியாபாரத்தில் உயர்ந்த லாபம் வந்து சேரும். தொழில்துறையில் இருந்த போட்டிகள் மறைந்து போகும். கண் திருஷ்டி சம்பந்தப்பட்ட பாதிப்பு விலகும். குலதெய்வத்தினுடைய அருள் கிட்டும். மேற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவி உறவு மனமகிழ்ச்சியுடன் திகழும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி அடைவார்கள்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலைப்பளு குறையும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆரோக்கியம் மேம்படும்.

இன்று உங்கள் பலம்:

எதைப் பற்றியும் கவலைப்படாமல் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பெரியோரின் ஆசி பக்கபலமாக இருக்கும்.

இன்று உங்கள் பலவீனம்:

பிள்ளைகளின் போக்கால் மனச்சுமை அதிகரிக்கும். மனைவியின் பேச்சும் இடையூறை ஏற்படுத்தும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 பங்குச்சந்தையில் நிதானமாக செயல்பட வேண்டும்.

2 இணையத் தள ஆசைகளில் ஈடுபடக் கூடாது.

3 அந்நிய பெண்களிடம் நெருக்கம் கூடாது.

அதிர்ஷ்ட எண்: 1,6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! திருப்தியான செய்திகள் கிடைக்கும் நாள். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பத்தில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிட்டும். முதலாளியிடம் தோன்றிய கருத்து வேறுபாடு மறையும். எதிர்ப்புகளால் வந்த இன்னல்கள் விலகி சந்தோஷம் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கை கொடுக்கும். வரவுக்கு தக்கபடி செலவுகளும் வரும். உறவினர்களின் மனநிலையில் மாற்றம் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி பெறுவார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொருள் வரவு அடைவார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: அயல்நாட்டில் இருந்து உங்களுக்கு தேவையான செய்தி கிடைக்கும். கையிருப்பு வியாபாரத்திற்கு உதவும். இன்று உங்கள் பலவீனம்: உங்கள் நினைப்புக்கு மாறான சில காரியங்கள் நடக்கும். அலுவலகத்தில் பொல்லாங்கு ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இரவு நேர பயணங்களில் கவனமாக இருக்க வேண்டும். 2 பணம் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக நடக்க வேண்டும். 3 கோபம் இருந்தாலும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! திட்டமிட்ட காரியங்கள் நடக்கும் நாள். மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். நீண்ட தூர பயணங்கள் அனுகூலத்தை கொண்டு வரும். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகும். வியாபாரத்தில் சிறப்பான உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரித்து கையிருப்பு கூடும். வேலை இடத்தில் வேண்டிய பலனை அடைவீர்கள். உங்கள் வார்த்தைக்கு மரியாதை இருக்கும். இறைவன் அருளால் நல்லது நடக்கும்.

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான பலன் கிடைக்கும்.

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு பதவி உயர்வு வந்து சேரும்.

விசாகம் நட்சத்திரக்காரர்கள் தானிய லாபம் அதிகரிக்கும்.

இன்று உங்கள் பலம்:

சுபகாரிய பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். ஊருக்குள் உங்களின் பேச்சுக்கு தனி மரியாதை உண்டு.

இன்று உங்கள் பலவீனம்:

நீங்கள் எதிர்பார்த்த முக்கிய செய்தி வர தாமதமாகும். நண்பர்களும் சில நேரம் புரிந்து நடக்க மாட்டார்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 தேக ஆரோக்கியத்தில் அக்கறையாக இருக்க வேண்டும்.

2 அனாவசியமான செலவுகளை குறைக்க வேண்டும்.

3 மற்றவர்களின் பேச்சை காதில் வாங்க கூடாது.

அதிர்ஷ்ட எண்: 6,3

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! வியாபாரம் மந்தமாக நடக்கும். தொழில்துறையில் இடையூறுகள் தோன்றும். வெளியிலிருந்து எதிர்பார்த்த செய்தி தாமதமாகும். வியாபாரத்திற்கு மறைமுக எதிர்ப்பு இருக்கும். யோக பலன்கள் தாமதமாக கிடைக்கும். தன தானிய சேர்க்கை உண்டாகும். வேலை இடத்தில் சில சிரமங்கள் உருவாகும். மேலதிகாரிகளின் கோபம் மன சஞ்சலத்தை கொடுக்கும். குலதெய்வத்தின் அருளால் குறைகள் தீரும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு மந்தமான பலன் ஏற்படும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் செலவுகள் கூடும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் அரசு உதவி தாமதமாகும். இன்று உங்கள் பலம்: தொழில் ஏற்பட்ட போட்டிகளை முறியடிக்கும் திட்டம் வகுப்பீர்கள். தடைகளைத் தாண்டி செல்லும் தைரியம் உருவாகும். இன்று உங்கள் பலவீனம்: உத்தியோகம் பார்க்கும் இடத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத செலவுகள் வரும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 முயற்சிகளில் மனச்சோர்வு கூடாது. 2 பெரிய மனிதர்களிடம் மிக கவனமாக வார்த்தைகளை பேச வேண்டும். 3 உறவினர்கள் பேச்சுக்களை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.

தனுசு ராசி அன்பர்களே! வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். தொழில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் புகுத்தப்படும். வேலையில் இருப்பவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும். மின்சாதன பொருட்கள் வாங்குவீர்கள். எதிர்ப்புகளை சாதகமாக மாற்றும் சிந்தனை உண்டு. கிழக்கு திசையில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனைவி மக்களின் அன்பும் ஆதரவும் உறுதுணையாக இருக்கும்.

மூலம் நட்சத்திரக்காரர்களுக்கு தனலாபம் அதிகரிக்கும்.

பூராடம் நட்சத்திரக்காரர்கள் தொழில் வெற்றி கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நடக்கும்.

இன்று உங்கள் பலம்:

மன உறுதியுடன் எந்த காரியத்தையும் செய்வீர்கள். வேலையில் திறமை வெளிப்பட்டு பெருமை அதிகரிக்கும்.

இன்று உங்கள் பலவீனம்:

வீட்டுக்கு குழப்பத்தால் மனம் பலவீனப்படும். எதிர்பார்த்த ஒரு காரியம் தள்ளிப் போகும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 இரவு நேரத்தில் வெளியிடங்களில் தங்க வேண்டாம்.

2 அந்நிய பெண்களிடம் அளவோடு பழக வேண்டும்.

3 ஆடம்பரமாக செலவு செய்வது பணத்திற்கு கேடாகும்.

அதிர்ஷ்ட எண்: 3,6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் கரு நீலம்

வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி

மகர ராசி அன்பர்களே! அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பாராத லாபம் கிட்டும். வியாபாரத்தில் வாய்ப்புகள் குவியும். வெளிவட்டார செல்வாக்கு அதிகரிக்கும். குலதெய்வத்தில் அருள் பரிபூரணமாக இருக்கும். பதவி உயர்வு உண்டாகும். சம்பளம் அதிகரிக்க பேச்சுவார்த்தை நடக்கும். பணி மாறுதலும் கிடைக்கும். தன தானிய விருத்தி உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் பண வசதி அதிகரிக்கும்.

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் தானிய யோகம் அடைவார்கள்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் காரிய வெற்றி பெறுவார்கள்.

இன்று உங்கள் பலம்:

உங்களுக்கு வரவேண்டிய பணம் இப்பொழுது கிடைக்கும். நெருங்கிய நண்பரின் ஆதரவு உண்டு.

இன்று உங்கள் பலவீனம்:

சில நேரங்களில் செலவுகள் கை மீறிப் போகும். வீட்டில் உங்கள் மனதை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 பண விஷயத்தில் எல்லோரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

2 புதிய முதலீடுகளில் கவனம் தேவை.

3 வெளியூர் பயணத்தில் பணம் பொருள் பாதுகாப்பு முக்கியம்.

அதிர்ஷ்ட எண்: 9,2

அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு.

வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

கும்ப ராசி அன்பர்களே! வெற்றிகரமான செய்திகள் கிடைக்கும் நாள். வீடு கட்டும் பணிகள் தொடங்கப்படும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். தொழிலில் சிறப்பான லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நினைத்ததை தாண்டி வருமானம் அதிகரிக்கும். கையிருப்பு கூடும். பணவரவு தாராளமாக இருக்கும். வேலை இடத்தில் சிக்கல்கள் மறையும். விரும்பிய இடத்துக்கு மாறுதல் கிடைக்கும். தெற்கு திசையில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலை உயர்வு உண்டாகும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு தன வரவு அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு ஆபரணச் சேர்க்கை ஏற்படும். இன்று உங்கள் பலம்: வருவது வரட்டும் என்று எந்த காரியத்திலும் இறங்குவீர்கள். அரசு உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். இன்று உங்கள் பலவீனம்: சில நேரங்களில் படபடப்பாக பேசுவீர்கள். எது சரி எது தவறு என்று ஆய்வு செய்ய மாட்டீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேலை செய்யும் இடத்தில் விவகாரம் செய்யக்கூடாது. 2 மனைவி சொல்லை காது கொடுத்து கேட்க வேண்டும். 3 அன்றைய வேலையை அன்றே முடிக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசி அன்பர்களே! சற்று மிதமான பலன் நடக்கும் நாள். எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். குடும்பச் செலவுக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படும். தொழில் சற்று மந்தமாக நடக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல் உருவாகும். கொடுக்கல் வாங்கல் பிரச்சனை மனதை சிரமப்படுத்தும். வீட்டில் மனைவியின் கோபம் மனதை காயப்படுத்தும். அவசியத்திற்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். உறவினர்களின் எதிர்ப்பு சிரமப்படுத்தும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு காரியத்தடை ஏற்படும் . உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் வருமானம் குறையலாம். ரேவதி நட்சத்திரக்காரர்கள் உதவிகள் தாமதமாகும். இன்று உங்கள் பலம்: தடைகள் வந்தாலும் போராடி வெற்றி கொள்ளும் மனத்தின்மை. சாதுரியமான பேச்சால் காரியம் சாதிக்கும் திறமை. இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் தேவையில்லாத பிரச்சனை மனதை வாட்டும். உங்களின் செயல்பாடுகள் விமர்சிக்கப்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கண்ட இடத்தில் பணத்தை வைக்காதீர்கள். 2 ஆன்லைன் சூதாட்டங்கள் அறவே கூடாது. 3 செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

தேதி 26 – புரட்டாசி – பராபவ வருடம் செவ்வாய் நாள் செவ்வாய் திதி திருதியை (up to 11:28 pm) சதுர்த்தி (up to October 15, 1:13 am) நட்சத்திரம் விசாகம் (up to October 14,1:42 am) அனுஷம் (up to October 15,4:03 am) யோகம் மரண-சித்த யோகம் நல்ல நேரம் 10:45 – 11:45 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 1:45 – 2:45 am / 7:30 – 8:30 pm இராகு காலம் மதியம் 3.00 – 4.30 எமகண்டம் காலை 9.00 – 10.30 குளிகை மதியம் 12.00 – 1.30 சூலம் வடக்கு பரிகாரம் பால் சந்திராஷ்டமம் அசுவினி சூரியோதயம் 6:02 AM சூரிய அஸ்தமனம் 5:47 PM சந்திரோதயம் Oct 13 8:02 AM சந்திர அஸ்தமனம் Oct 13 7:39 PM