அமெரிக்காவில் முன்னாள் ராணுவ மேஜருக்கு மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டதற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் முன்னாள் ராணுவ மேஜர் ஒருவருக்கு நிறைவேற்றப்படவுள்ள மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளரும் அதனை உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், ஐநா மனித உரிமைகள் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
2009-ஆம் ஆண்டு டெக்சாஸில் உள்ள ‘போர்ட் ஹூட்’ (Fort Hood) ராணுவ முகாமில் முன்னாள் அமெரிக்க ராணுவ மேஜர் நிடால் ஹசன் (Nidal Hasan), லேசர் குறி பொருத்தப்பட்ட கைத்துப்பாக்கியைக் கொண்டு ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தக்குதலில், 13 கொல்லப்பட்டதுடன் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்த விசாரணையின்போது, ‘வெளிநாடுகளில் உள்ள தலிபான் தலைவர்களைப் பாதுகாப்பதே தனது நோக்கம்’ என ஹசன் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, 2013-இல் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில், இவரைத் துப்பாக்கியால் சுட்டு (Firing Squad) மரண தண்டனையை நிறைவேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க ராணுவத்தில் கடந்த 1961-ம் ஆண்டுக்குப் பிறகு யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இந்த உத்தரவின் மூலம் 60 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க ராணுவத்தில் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனையாக இது இருக்கிறது.
இந்தச்சூழலில் தான், நிடல் ஹசனுக்கு டிசம்பர் 3ஆம் தேதி, 2009-ம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு நடந்த ஃபோர்ட் ஹூட் ராணுவத் தளத்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையை நிறைவேற்ற அமெரிக்க பாதுகாப்புத் துறை திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், மரண தண்டனை பொதுமக்கள் நேரலையில் பார்க்க முடியும் என என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) தெரிவித்துள்ளார். இந்நிலையில், அமெரிக்காவின் இந்த முடிவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறய்து.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம், மரண தண்டனையை நேரலையில் ஒளிபரப்புவது பொதுவெளியில் தண்டனையை நிறைவேற்றுவதற்குச் சமம் என்றும், இது சித்திரவதைக்கு எதிரான சர்வதேசத் தடையை மீறக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், இத்தகைய நடவடிக்கை கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவுபடுத்தும் தண்டனையாக அமையக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தத் தடை மீறப்பட்டால், அது ஒருவரின் வாழ்வுரிமை தொடர்பான சர்வதேச மனித உரிமைக் கவலைகளையும் எழுப்பும் எனக் கூறியுள்ளது.
<இந்த நிலையில், குற்றவாளிக்கு தண்டனை வழங்குவது ஒருபுறம் இருந்தாலும், அந்தத் தண்டனையைப் பொதுமக்கள் பார்வையிடும் நிகழ்வாக மாற்றுவது எந்த அளவுக்கு நியாயமானது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது



