ஐக்கிய அரபு அமீரக விபத்தில் இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் இந்தியர்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் இருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.