
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி பங்களாதேஷ் திரும்பத் திட்டமிட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியிலிருந்து வெளியேறிய அவர், ஒகஸ்ட் 5ஆம் திகதி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.
தற்போது பங்களாதேஷின் வெற்றி தினமான டிசம்பர் 16ஆம் திகதி டாக்கா திரும்புவதற்காக, அந்நாட்டின் தேசிய விமான சேவையான பிமான் பங்களாதேஷ் விமானத்தில் பயண ஏற்பாடுகளைச் செய்து தருமாறு கோரியுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் சையத் மொஸம்மல் அலி தெரிவித்துள்ளார்.
எனினும், மாணவர் போராட்டத்தின்போது இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷ் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதால், அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார் என்றும், இந்தியாவிடமிருந்து நாடு கடத்தல் மூலமாகவே திரும்ப முடியும் என்றும் பங்களாதேஷ் அரசு தெரிவித்துள்ளது.
இதனால் ஷேக் ஹசீனாவின் அறிவிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியிலான கவனத்தைப் பெற்றுள்ளது.



