கடூழிய சிறைதண்டனைக்கு உள்ளாகும் எந்தவொரு கைதிக்கும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கென ஒரு முறைமை காணப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே சிறைச்சாலைகள் கட்டளை சட்டத்தின் கீழ் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் கைதிகளுக்கான ஆடை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்கிழமை (06) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.செய்தி சந்தா
கடூழிய சிறைத்தண்டனை ஒருவருக்கு விதிக்கப்பட்டால், சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின்படி செயல்பட வேண்டிய முறை ஒன்று உள்ளது. எனவே இந்தச் சம்பவத்தில் எந்தவொரு சிறப்புச் சலுகையும் செய்யப்படவில்லை. ஏற்கனவே சிறையிலடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் 63 தேரர்களுக்கு எந்த அடிப்படையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோ, அதேபோன்றுதான் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கும் சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் கீழ் கைதிகளுக்கான ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது.
சகல தேரர்களுக்கும் சட்டம் ஒரே மாதிரியாகவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலை கட்டளை சட்டத்துக்கு அப்பால் என்னால் எதுவும் கூற முடியாது. ஏனெனில் சிறைச்சாலை நடவடிக்கைகள் சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே அந்தக் கோரிக்கைகளைச் சிறைச்சாலைச் சட்டங்களின்படி பரிசீலிப்பார்கள். மேலும் 63 பேர் அவ்வாறு இருக்கிறார்கள் என்று நான் ஒரு தகவலாகவே கூறினேன் என்றார்.



