–
இலங்கையின் தென்மேற்கு கடற்கரையில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில், ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.
குறித்த கப்பல்கள் தற்போது நடுவழியில் தத்தளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கடுமையான தடைகள் மற்றும் கடல்சார் கட்டுப்பாடுகள் காரணமாக ஈரான் கப்பல்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.
ஈரானிய கப்பல்கள்
அத்துடன், சில கப்பல்களில் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சீனாவிற்கு மசகு எண்ணெய் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள, ஈரானுடன் தொடர்புடைய 20 கப்பல்களே இவ்வாறு இலங்கை கடற்கரைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
ஈரானின் எண்ணெய் வர்த்தகத்திற்கு ஆதரவளிக்கும் தரப்பினருக்கு எதிராக அமெரிக்கா கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கப்பல்களில் உள்ள மாலுமிகள் உணவு, எரிபொருள் மற்றும் அவசியமான விநியோகங்களை பெற்றுக்கொள்ள கடுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கைக்கு கடும் அழுத்தம்
எனினும் அமெரிக்கத் தடைகளில் சிக்கிக்கொள்வோம் என்ற பயம் காரணமாக சில இலங்கை விநியோகஸ்தர்கள் சேவைகளை வழங்குவதற்குத் தயங்குகின்றனர்.
இதனால் மாலுமிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இந்தக் கப்பல்கள் இலங்கையின் இறையாண்மைக்குட்பட்ட கடல் எல்லைக்கு வெளியே, சர்வதேச அருகில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இதனால் இலங்கை அதிகாரிகளுக்கு அவற்றின் மீதான சட்டப்பூர்வ அதிகாரங்கள் வரம்பிற்குட்பட்டதாக மாறியுள்ளன. எனினும், கப்பல்களின் போக்குவரத்தைத் தொடர்ந்து இலங்கை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்



