தகாத உறவால் 10 துண்டாக வெட்டப்பட்ட பெண் பயங்கரம்

 

பணம் கேட்டு தொல்லை செய்த பெண்ணை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற கறிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஆக்கிமேடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் ஆண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதன் மூலமாக இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் இருவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக உறவை துண்டித்துள்ளார். இதையடுத்து கள்ளக்காதல் மூலம் பிறந்த ஆண் குழந்தையை தனது உறவினரான பவானிப்புரத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்துள்ளார்.

பின்னர், குறித்த பெண்ணுக்கும் ஷபிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் பெண் ஷபியிடம் பணம் கேட்டு தொல்லை அளித்துள்ளார். பணம் தரவில்லை என்றால் தனது ஆண் குழந்தையை தருமாறு கேட்டார்.

10 ஆண்டுகளாக வளர்த்து வந்த குழந்தையை ஷபி கொடுக்க மறுத்து கல்யாணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஷபி கல்யாணியை கொலை செய்ய திட்டம் தீட்டி கல்யாணியை அரிவாளால் வெட்டிக் கொன்றார்.

இதையடுத்து உடலை 10 துண்டுகளாக வெட்டி அருகிலுள்ள கால்வாயில் வீசி விட்டு சென்றார். இதையடுத்து அந்த வழியே சென்ற பொதுமக்கள் கால்வாயில் உடல் பாகங்கள் கிடப்பதை பார்த்து இப்ராகிம்பட்டினம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதன் மூலம் பொலிசார் நடத்திய விசாரணையில் கல்யாணி தனது குழந்தையை கேட்டும் பணம் கேட்டும் ஷபியை மிரட்டிய ஆத்திரத்தில் கொலை செய்தது அம்பலமானது.

இதையடுத்து பொலிசார் ஷபியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.