மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 29-செப். 2026

 

மேஷ ராசி அன்பர்களே! இன்று உங்களுக்கு உயர்வான பலன்கள் கிடைக்கும். நினைத்ததெல்லாம் சிறப்பாக நடக்கும் மங்கல நிகழ்சிகளுக்கு ஏற்பாடுகள் நடக்கும். தொழிலில் உச்சகட்ட யோகம் கிடைக்கும். வியாபாரத்தில் ஒரு நிலையான இடம் உண்டு. யோக பலன்கள் அதிகமாக இருக்கும். மேற்கு திசையில் இருந்து ஒரு அனுகூலமான செய்தி வரும். வேலை இடத்தில் உங்களின் மதிப்பு உயரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு யோக பலன் உண்டு. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சம்பள உயர்வு அடைவர். கிருத்திகை நட்சத்திரத்தில் செல்வாக்கு பெறுவார்கள்.

 

இன்று உங்கள் பலம்: உங்கள் தேவை அறிந்து உறவினர்கள் உதவி செய்ய காத்திருப்பார்கள். வெளியில் இருந்து தேவைப்பட்ட பணம் கைக்கு வரும். இன்று உங்கள் பலவீனம்: அவசர வேலையாக கிளம்பும்போது தலைவலி மனக் கிலேசத்தை தரும். எதிர்பார்த்த காரியத்தில் கொஞ்சம் சுணக்கம் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருக்க வேண்டும். 2 எந்த வேலையையும் தள்ளிப் போட வேண்டாம். 3 பிள்ளைகளுக்கு தேவையானதை வாங்கிக் கொடுக்க மறக்கக்கூடாது. அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்

ரிஷப ராசி அன்பர்களே! நினைத்தது நிறைவேறுகின்ற நாள். புதிய முயற்சியில் அதிக லாபத்தை கொடுக்கும். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். கிழக்கு திசையில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட்டு கையிருப்பு பெருகும். சேமலாபங்கள் கூடும். குலதெய்வ அருள் கிடைக்கும். பெண்களால் ஆதாயம் உண்டு. வாகன யோகம் உண்டு. வேலை இடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்பு பலனடைவர். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன நிம்மதி பெறுவர்.

 

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகன யோகம் சித்திக்கும். இன்று உங்கள் பலம்: எதிர்ப்புகளை எல்லாம் முறியடிக்கின்ற மன உறுதி இருக்கும். அவசிய செலவுகளுக்கான கையிருப்பு உண்டு. இன்று உங்கள் பலவீனம்: நீங்கள் தேடிப் போக வேண்டிய நபர் வெளியூர் சென்று விடுவார். தொழிலில் அரசாங்க இடையூறு ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 நகை பணம் போன்றவற்றில் அலட்சியம் கூடாது. 2 வியாபார ரகசியங்களை வெளிப்படையாக பேசக்கூடாது. 3 தேக ஆரோக்கியத்தில் அக்கறையாக இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்கள்: 2,9 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர் பெருமான்.

மிதுன ராசி அன்பர்களே! இன்று வெற்றிகள் வந்து சேரும் நாள். எண்ணியதெல்லாம் நடக்கும். தொழிலில் மிக மேன்மையான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மக்கள் செல்வம் உருவாகும். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். மேற்கு திசையில் இருந்து உங்களுக்கு அனுகூலமான தகவல் கிடைக்கும். வேலை இடத்தில் நிம்மதி உண்டாகும். குலதெய்வத்தினுடைய அனுக்கிரகத்தால் தேக ஆரோக்கியம் அதிகரிக்கும்.

 

மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நினைத்தது நடக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பண வரவு பெறுவார்கள். இன்று உங்கள் பலம்: வேகத்தோடும் விவேகத்தோடும் காரியம் செய்வீர்கள். லாப நட்டத்தை பெரிதாக கருத மாட்டீர்கள். இன்று உங்கள் பலவீனம்: செலவு செய்வதில் சிக்கனம் பார்க்க மாட்டீர்கள். வேலை இடத்தில் மனக்குழப்பம் ஏற்படும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அதிகமான ரொக்க பணத்தை கையில் எடுத்து செல்ல வேண்டாம். 2 மற்றவர்கள் சொல்வதையும் காதில் வாங்கிக் கொள்ள வேண்டும். 3 கண்ட கண்ட இடத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.

கடக ராசி அன்பர்களே! வேண்டியதெல்லாம் உங்களுக்கு கிடைக்கும் நாள். தொழிலில் எதிர்பாராத வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் கொள்ளை லாபம் கிடைக்கும். உறவினர்களின் உதவவியால் ஒரு பெரிய காரியத்தை முடிப்பீர்கள். சேமலாபங்கள் அதிகரிக்கும். தெற்கு திசையில் இருந்து உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும்.
வெளியூர் நண்பர் உங்களுக்கு சாதகமான தகவலை தருவார். வேலை இடத்தில் எதிர்பார்த்த நன்மை நடக்கும்.

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெருமை அடைவார்கள்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசு உதவி பெறுவார்கள்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோரின் ஆசி கிடைக்கும்.

இன்று உங்கள் பலம்:

வெற்றி பெறுவதற்கான அத்தனை திட்டங்களையும் போடுவீர்கள். வேலையை முடிக்க வேண்டும் என்ற மனப்போக்கு இருக்கும்.

இன்று உங்கள் பலவீனம்:

உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத அளவுக்கு வீட்டில் சிக்கல் உண்டாகும். பிள்ளைகளாலும் மன நிம்மதி குறையும்.

கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:

1 வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக ஓட்ட வேண்டும்.

2 வேலை இடத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

3 அறிவுரை சொல்லும் நபரிடம் அதிகம் பேசாதீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8,5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மஞ்சள்.

வணங்க வேண்டிய தெய்வம்: சோமசுந்தரப் பெருமான்

சிம்மராசி அன்பர்களே! நினைத்தது கொஞ்சம் தாமதமாக நடக்கும் நாள். தொழிலில் மிகுந்த அக்கறையோடு செயல்பட வேண்டும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படும். தேடிப் போகின்ற நபர் வெளியூர் சென்றிருப்பார். நீங்கள் எதிர்பார்த்த முக்கியமான தகவல் வர தாமதமாகும். தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். வேலை இடத்தில் பணி சுமை கூடும். தனலாபங்கள் ஏற்ற இறக்கமாக இருக்கும்.

 

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன நிம்மதி பெறுவார்கள். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடுமையாக உழைப்பார்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலைப்பளு குறையும். இன்று உங்கள் பலம்: உங்களுக்கு எதிராக இருப்பவர்களை அடையாளம் காணும் அறிவும் திறனும் மேம்படும். கடின உழைப்பு வெற்றி தரும் என்பதை உணர்வீர்கள். இன்று உங்கள் பலவீனம்: பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் சில கோளாறுகள் உண்டாகும். யாரையும் எளிதில் நம்பி விடுவீர்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். 2 குழந்தைகளின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு நடக்க வேண்டும். 3 பெற்றோர்களின் உடல்நிலையை கவனமாக பார்க்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 1,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.

கன்னி ராசி அன்பர்களே! தொட்ட காரியம் எல்லாம் தடங்கல் இல்லாமல் நடக்கும். எந்த விஷயத்திலும் வெற்றி வாய்ப்பு ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வாகன வசதி ஏற்படும். தொழிலில் வியாபாரம் பெருகும். கையில் தாராளமாக பணம் புரளும். பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.வேலை இடத்தில் மரியாதை உயரும். மேற்கு திசையில் இருந்து சிறப்பான செய்தி ஒன்று உங்களுக்கு வரும். யோக பலன் கூடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதையும் சாதிப்பார்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வியாபாரம் பெருகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி நடை போடுவார்கள்.

இன்று உங்கள் பலம்: புதிய திட்டங்களை தீட்டி வெற்றி பெற முடிவு செய்வீர்கள். அரசாங்க வேலைகள் தடையில்லாமல் நடக்கும். இன்று உங்கள் பலவீனம்: காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருப்பதில் தாமதம். அடுத்தவரை நம்பியே காரியம் பார்க்க நினைப்பது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதல் அக்கறை வேண்டும். 2 தந்தையாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தாமதம் கூடாது. 3 ஆன்லைன் சூதாட்டங்களில் இறங்க கூடாது. அதிர்ஷ்ட எண்: 1,9 அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.

துலாம் ராசி அன்பர்களே! ஆசைப்பட்டது எல்லாம் நடக்கும் நாள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொழில்துறையில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.. கேட்ட இடத்திலிருந்து பணவரவு இருக்கும். மங்கையர்களால் அனுகூலமும் நன்மையும் உண்டாகும். சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். புண்ணிய நதிகளில் நீராடும் பாக்கியம் ஏற்படும். வாகன சுகம் உண்டாகும். அரசு பயம் விலகும். பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு காரியம் கை கூடி வரும் சுவாதி

நட்சத்திரக்காரர்களுக்கு நல்லது நடக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்கள் பதவி உயர்வு அடைவார்கள். இன்று உங்கள் பலம்: நீங்கள் வகுத்த வியூகம் தொழிலுக்கு பக்கபலமாக இருக்கும். எந்த வகையிலும் நீங்கள் விரும்பிய காரியம் நடக்கும். இன்று உங்கள் பலவீனம்: மனைவி சில நேரம் ஏறுக்கு மாறாக நடப்பார். உறவினர்கள் உங்களுக்கு எதிராக காய் நகர்த்துவார்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வேலை இடத்தில் சோம்பேறித்தனமாக இருக்கக் கூடாது. 2 வெளியூர் செல்லும்போது உடலையும் பேண வேண்டும். 3 வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட எண்: 6,3 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.

விருச்சிக ராசி அன்பர்களே! இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நோய் தொல்லைகள் நீங்கி தேக ஆரோக்கியம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவினர்கள் வருகையால் கலகலப்பு கூடும். தோப்பு துறை வகையில் வரவுகள் வந்து சேரும். உஷ்ணம் சம்பந்தப்பட்ட ரோகங்கள் விலகும். பொருள் இழப்போ நஷ்டமோ ஏற்படாது. எதிர்ப்புகள் முனை மழுங்கி போகும். குலதெய்வ அருள் கிடைக்கும். சிவ பூஜை மூலம் மிருத்யுஞ்ச யோகம் உண்டாகும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு ஆசைகள் நிறைவேறும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் யோக பலன்

அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் பொருள் வரவு கூடும். இன்று உங்கள் பலம்: எந்த நேரத்திலும் உங்களுக்கு உதவி செய்ய காத்திருக்கும் நண்பர்கள். எதையும் எதிர்க்கக் கூடிய துணிச்சல் மிகுந்த மனம். இன்று உங்கள் பலவீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். நல்ல நண்பரே எதிராக வேலை செய்வார். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வாகனங்கள் ஓட்டும் போதும் சாலையை கடக்கும் போதும் கவனம். 2 பிள்ளைகளிடம் அதிக நேரத்தை செலவிட வேண்டும். 3 தொல்லை தரும் நண்பர்களிடம் ஒதுங்கி இருக்க வேண்டும். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: குன்றக்குடி முருகன்.

தனுசு ராசி அன்பர்களே! வெற்றிகள் தேடி வரும் நாள். பொருள் வரவு அதிகரித்து மகிழ்ச்சி கூடும். பயிர் தொழிலில் லாபம் கிட்டும். விவசாய வேலைகளில் வருமானம் கூடும்.அரசுத் துறையில் இருந்து உதவி கிடைக்கும். அனுகூலங்களும் வந்து சேரும். குடும்பத்தில் சௌகரியம் அதிகரிக்கும். உறவினர்கள் வரவால் வீடு கலகலப்பாக இருக்கும். வடக்கு திசையில் இருந்து உங்களுக்கு நல்ல செய்தி வரும். குடும்ப சுகமும் ஆடை ஆபரணங்களும் சேரும். தொழில் முதலீடு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். மூல நட்சத்திரக்காரர்களுக்கு நினைத்தது நடக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் விரும்பியது கிடைக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள்

பணத் தேவை நிறைவேறும். இன்று உங்கள் பலம்: உங்களின் மன தைரியமும் புதிய வியூகமும் மற்றவர்களை வியக்க வைக்கும். குலதெய்வத்தின் அருள் பக்கபலமாக இருக்கும். இன்று உங்கள் பலவீனம்: வெளியூரில் இருந்து வர வேண்டிய செய்தி தாமதமாகும். மனைவி மக்கள் சிந்தனைக்கு எதிராக இருப்பார்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொழிலில் ஏற்படும் சிக்கல்களை கவனமாக தீர்க்க வேண்டும். 2 கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 3 வெளியூர் சென்றால் வீட்டில் நகையோ பணமோ வைக்க கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கரு நீலம். வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி.

மகர ராசி அன்பர்களே! உங்களின் தேவைகள் பூர்த்தியாகும் நாள். தானிய லாபம் உண்டாகும். குடும்ப சௌரியங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். ஐடி ஊழியர்கள் சிறப்பான பலன் பெறுவார்கள். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். அறிவுத்திறமையால் முன்னேற்றம் ஏற்படும். வேலை இடத்தில் பதவி உயர்வு உண்டாகும். புனித நதிகளில் நீராடும் வாய்ப்பு ஏற்படும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் பதவி உயர்வு உண்டாகும். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் நினைத்தது நடக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் பண வரவு இருக்கும். இன்று உங்கள் பலம்: வீரியமாக நின்று காரியத்தை

முடிக்கின்ற ஆற்றல் பெறுவீர்கள். நல்ல நண்பர் பண உதவி செய்ய தயாராக இருப்பார். இன்று உங்கள் பலவீனம்: உங்கள் வேலை திறனை மேலதிகாரி குறைவாக மதிப்பிடுவார். உங்களின் நல்ல உள்ளத்தை உறவினர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 தொழிலில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும். 2 பொறாமைப்படும் உறவினரிடம் தள்ளியே இருக்க வேண்டும். 3 தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 9,2 அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு. வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.

கும்ப ராசி அன்பர்களே! மிதமான பலன்கள் நடக்கும் நாள். வேலை சம்பந்தப்பட்ட அலைச்சல் அதிகமாகும். சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாது. பகைவர்கள் தரும் தொல்லைகளை எதிர்க்க வேண்டும். பிள்ளைகளாலும் நெருக்கடி உண்டாகும். ஆடம்பரமான செலவுகளை குறைக்க வேண்டும். தொழிலில் மிதமான லாபமே கிடைக்கும். அதிகாரிகள் தொல்லையும் ஏற்படலாம். வம்பு வழக்குகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு லாபம் சற்று குறையும். சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இரவு தூக்கம் கெடும். இன்று உங்கள் பலம்: வியாபாரத்தில் எதிர்ப்பு அதிகரித்தாலும் அதை சமாளிக்கும் திறன் உண்டு. கேட்ட இடத்தில் பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் பலவீனம்: கைக்கெட்டும் தூரத்தில் வரும் காரியம் கொஞ்சம் தள்ளி போகும். அலைச்சல் காரணமாக உடல் சோர்வு உண்டாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 வங்கிக்கு பணம் எடுத்து செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். 2 இரவு நேரங்களில் தனியாக கார் பயணம் செய்ய வேண்டாம். 3 கிடைக்கிறது என்று அதிகம் கடன் வாங்க வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.

மீன ராசி அன்பர்களே! மங்கலகரமான செய்திகள் வந்து சேரும் நாள். நல்ல காரியங்கள் தாமாகவே நடக்கும். வேலை இடத்தில் தொல்லைகள் விலகும். அதிகாரிகளின் பயம் நீங்கும். மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். நன்மைகள் பெருகி மன நிம்மதி தரும். வியாபாரத்தில் வருமானம் கூடும். வடக்கு திசையில் இருந்து அனுகூலமான செய்தி வரும். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய வாய்ப்பு ஏற்படும். வியாபார லாபங்கள் அதிகரிக்கும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு

எண்ணியது நிறைவேறும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பெரியோர்களின் ஆசி பெறுவார்கள். ரேவதி நட்சத்திரக்காரர்கள் மரியாதை அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: உறவினர்கள் உங்கள் மனதைப் புரிந்து கொண்டு நடப்பார்கள். பிள்ளைகளின் அனுசரணையான போக்கு மனதில் தெம்பை கொண்டு வரும். இன்று உங்கள் பலவீனம்: மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். 2 விளையாட்டுத்தனமான காரியங்கள் செய்ய வேண்டாம். 3 இணையதள பேச்சுக்களை நம்ப வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.

இன்றைய பஞ்சாங்கம் தேதி 12 – புரட்டாசி –

பராபவ வருடம் செவ்வாய் நாள் செவ்வாய் திதி திருதியை (up to 5:10 pm) சதுர்த்தி (up to September 30, 2:55 pm) நட்சத்திரம் அஸ்வினி (up to 9:03 am) பரணி (up to September 30,7:36 am) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 10:45 – 11:45 am / 4:45 – 5:45 pm கௌரி நல்ல நேரம் 1:45 – 2:45 am / 7:30 – 8:30 pm இராகு காலம் மதியம் 3.00 – 4.30 எமகண்டம் காலை 9.00 – 10.30 குளிகை மதியம் 12.00 – 1.30 சூலம் வடக்கு பரிகாரம் பால் சந்திராஷ்டமம் அஸ்தம், சித்திரை சூரியோதயம் 6:01 AM சூரிய அஸ்தமனம் 5:56 PM சந்திரோதயம் Sep 29 7:55 PM சந்திர அஸ்தமனம் Sep 30 9:07 AM