இந்தியாவின் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 200 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி, சுமார் 10 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று (28) திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
சிறுமி, ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறி அதற்குள் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (27) ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக இரவு 7.45 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, இரவு 9.05 மணியளவில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தொடர்ந்து சுமார் 10 மணி நேரம் முன்னெடுக்கப்பட்ட மீட்புப் பணிகளின் பின்னர், இன்று அதிகாலை 3.50 மணியளவில் சிறுமி உயிருடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.News
எனினும், வைத்தியசாலையில் வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
10 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



