14 பேர் உயிரிழப்பு ,வெள்ளம், நிலச்சரிவு நேபாளத்தில் தொடர் மழை பாதிப்பு

நேபாள நாட்டில் கடந்த வியாழக்கிழமை முதல் கொட்டித் தீர்க்கும் தொடர் மழை காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.

இந்தச் சூழலில் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) காலை நேபாளத்தின் மத்தியப் பகுதியில் பாயும் நாராயணி ஆற்றில் வெள்ள நீர் அபாய கட்டத்தை தாண்டி பாய்கிறது. இதனால் அந்த ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களை நேபாள அலுவலர்கள் எச்சரித்துள்ளனர். இதேபோல சித்வான் பகுதிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது.

இந்த மழையால் ஏற்பட்ட பாதிப்பில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மழை தொடர்கின்ற காரணத்தால் மீட்பு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது. மியாக்டி, பாக்லுங் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நேபாளத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகள் அதன் அபாய கட்டத்தை கடந்து நீர் பாய்வது குறிப்பிடத்தக்கது.

திபெத்-நேபாள எல்லையில் கடந்த மாதம் 26-ம் தேதி பனிப்பாறை ஏரி உடைந்ததன் விளைவாக நேபாளத்தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பாறைகள், மண், சேறு சகதியுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் வீடுகள், சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள் என வழியில் இருந்த அனைத்தையும் வாரி சுருட்டி சென்றது. ரசுவா, நுவாகோட், தாதிங் ஆகிய மாவட்டங்களை இந்த பெருவெள்ளம் புரட்டிப் போட்டது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உள்நாடு மாற்று வெளிநாடுகளை சேர்ந்த மக்களில் சுமார் 1,451 பேர் உயிரிழந்தனர். சுமார் 5,000 பேர் மாயமாகி உள்ளனர். கடந்த சனிக்கிழமை வரை சுமார் 13,795 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.