வேகமாக பரவிய புதிய ‘பிஜே21’ வைரஸ்- தடுப்பூசிக்கு கட்டுப்படுவதாக  தகவல்

கனடாவில் கண்டறியப்பட்டு உலகெங்கும் வேகமாக பரவிவரும் பிஜே2.1 என்ற புதிய உருமாறிய கிருமியால் மக்களுக்கு எவ்வித உயிராபத்தும் ஏற்படாது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக மக்களை கடந்த சில ஆண்டுகளாக அச்சுறுத்தி வந்த கொரோனா பெருந்தொற்றின் தொடர்ச்சியாக, 2025ம் ஆண்டு தீவிரமாக பரவிய ஜேஎன்1 உருமாறிய வகையிலிருந்து எம்சி10.1.7 என்ற துணைப் பிரிவு உருவானது. இந்த சூழலில், உலக சுகாதார அமைப்பின் சர்வதேச ஆய்வாளர்கள் ‘பிஜே2.1’ என்ற மற்றொரு அதிவேக உருமாற்ற வைரஸை தற்போது தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வழக்கமாக வைரஸ்கள் படிப்படியாக மரபணு மாற்றங்களை சந்திக்கும் நிலையில், இந்த புதிய கிருமி ஒரே நேரத்தில் எதிர்பாராத பல தீவிர மரபணு மாற்றங்களை கொண்டு மின்னல் வேகத்தில் தோன்றி உள்ளது. மனித செல்களின் மேற்பரப்பில் உள்ள ஏசிஇ2 ஏற்பிகளுடன் மிக எளிதாக பிணைந்து கொள்ளும் அபார ஆற்றல் இந்த வைரசுக்கு இயற்கையாகவே அதிகமாக இருக்கிறது என்று மார்கஸ் ஹாஃப்மேன் தலைமையிலான விஞ்ஞானிகள் மருத்துவ இதழில் வெளியிட்டுள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் கனடா நாட்டின் ஒன்டாரியோ மாகாணத்தில் முதன்முதலாக கண்டறியப்பட்ட இந்த வைரஸ், சர்வதேச அளவில் ஆய்வகங்களில் சோதிக்கப்படும் மாதிரிகளில் தனது எண்ணிக்கையை கிடுகிடுவென அதிகரித்து தொடர்ந்து புதிய சவாலாக உருவெடுத்து வருகிறது.

இந்த வகை கிருமி உடலில் நுழைந்தால் சாதாரண பருவக்கால சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளே அதிகம் தோன்றுவதாக உலக சுகாதார அமைப்பின் மருத்துவ அறிக்கைகள் தெளிவாக எச்சரிக்கின்றன. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு கடுமையான தொண்டை வலி, நீண்ட நாட்கள் நீடிக்கும் உடல் சோர்வு, விடாத இருமல், தலைவலி, மூக்கடைப்பு மற்றும் தசை வலி போன்ற கடுமையான உபாதைகள் வரிசையாக ஏற்படுகின்றன. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த ஜூன் 30ம் தேதி உறுதி செய்யப்பட்ட இந்த தொற்று, ஸ்பெயின், பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட 8 நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

எனினும் பழைய திரிபுகளை விட இந்த வகை வைரஸ் அதிக மரணங்களையோ அல்லது தீவிர மருத்துவமனை அனுமதியையோ ஏற்படுத்தவில்லை என்பது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை தந்துள்ளது. புதிய உருமாற்ற தடுப்பூசிகள் இந்த கிருமியை முழுமையாக அழிக்கும் திறன் கொண்டிருப்பதால், மக்கள் அச்சப்படாமல் இன்சாகாக் போன்ற மருத்துவ கண்காணிப்பு வழிகாட்டுதல்களை விழிப்புணர்வுடன் முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.