இப்பொழுது ஏழரை சனியிருந்து விடுபட போகும் 3 ராசிகளுக்கு எதிர்காலம் எப்படி?

 

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய சனி பகவான் இப்பொழுது மீன ராசியில் சஞ்சாரம் செய்து வருகின்றார். இவர் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் வந்திருக்கக் கூடிய நிலையில், 2027 ஜூன் 3ஆம் தேதி இவர் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இந்நிலையில் தற்பொழுது ஏழரை சனி நடக்கக்கூடிய கும்ப ராசி, மீன ராசி, மேஷ ராசி ஆகியோருக்கு எப்பொழுது அதிலிருந்து விடுபடுவார்கள் சனிபகவானின் வக்கிர பெயர்ச்சி மூலம் அதன் தாக்கத்தை மாற்றி அமைக்குமா எனத் தெரிந்த கொள்வோம்.

சனி பகவான் தற்பொழுது மீன ராசியில் சஞ்சரிக்க கூடிய நிலையில், கும்பம், மீனம் மற்றும் மேஷம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் ஏழரை சனி நடப்பதால் அதிலிருந்து விடுபடுவதற்கான குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்கும் வாய்ப்பில்லை. 2027 ஜூன் 3ஆம் தேதி அவர் மேஷ ராசிக்கு மாறுவதும், மேலும் அப்பொழுது அவர் மேற்கொள்ள கூடிய சனி பக்ரகிரி எனும் பின்னோக்கிய இயக்கம் ஏழரை சனியிலிந்து சற்று நிவாரணம் பெறக்கூடியதாக இருக்கும்.

2025 மார்ச் 29ஆம் தேதி மீன ராசியில் நுழைந்த சனி பகவான் காரணமாக, மீன ராசிக்கு ஜென்ம சனி, கும்ப ராசிக்கு பாத சனி, மேஷ ராசி விரய சனி நடக்கிறது. மீன ராசியில் சனி சஞ்சாரம் செய்யக்கூடிய காலம் வரை இந்த மூன்று ராசிகளுக்கு தாக்கம் தொடரும். இவர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைக்க வாய்ப்பில்லை.
குறிப்பாக இந்த 2026 ஆம் ஆண்டு முழுவதும் சாதகமற்ற நிலையே இருக்கும். மேலும் 2026 டிசம்பர் 11ம் தேதி சனி வக்கிர நிவர்த்தி அடைகிறார். தொடர்ந்து 2027 ஜூன் மூன்றாம் தேதி அவர் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.

சனி மேஷ ராசியில் பெயர்ச்சி : ஜூன் 3, 2027 அன்று அவருக்கு நிலைமை மாறும்?
சனிபகவான் தற்பொழுது மீன ராசியில் சஞ்சரிக்கிறார். அவர் ஜூன் 3ஆம் தேதி மேஷ ராசியில் நுழையும் போது, சிம்ம ராசியை சேர்ந்த நண்பர்களுக்கு ஏழரை சனி காலம் முடிவடைய போகிறது. இதன் மூலம் கும்ப ராசி சேர்ந்தவர்கள் மிகுந்த நிம்மதி பெறவும், அடுத்த 30 ஆண்டுகள் இவர்களுக்கு ஏழரை சனி தொல்லை இருக்காது.

மேஷ ராசிக்கு சனி பெயர்ச்சி ஆன பின்னர், மீன ராசிக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகள் பாத சனி நடக்கும். இந்த காலம் ஏழரை சனியின் கடைசி பகுதியாக இருக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏழரை சனி காலத்தில் அனுபவித்த தொந்தரவுகள், பிரச்சனைகள் மூலம் பெற்ற அனுபவம் இவர்களுக்கு இனி உதவக்கூடியதாக இருக்கும். இது இவர்கள் செய்யக்கூடிய வேலை, தொழில் தொடர்பாக முன்னேற்றத்திற்கான சிறந்த பகுதியாக இருக்கும். ஓரளவுக்கு அனைத்து பிரச்சனைகள் இருந்து நிவாரணம் கிடைக்கும். நீங்கள் எந்த ஒரு வேலையையும் பார்த்து கடித்தற்கு எடுத்து செல்ல முடியும். அதே சமயம் இந்த காலத்தில் எதிலும் அகல கால் வைக்க வேண்டாம்.

மீன ராசியிலிருந்து பெயர்ச்சியாகி மேஷ ராசிக்கு சனி பகவான் சென்றாலும், ஏழரை சனியின் இறுதி கட்டம் என்பதால், அக்டோபர் 20, 2027 அன்று சனி வக்ர கதியில் (பின்னோக்கி) நகர்ந்து மீண்டும் மீன ராசிக்கே திரும்புவார். இதனால் மீண்டும் பிப்ரவரி 23 பிப்ரவரி 2028 வரை மீன ராசியில் சனி இருக்கும் காலத்தில் ஜென்ம சனி நடக்கும்.
2029 ஆகஸ்ட் 9ஆம் தேதி சனி பகவான் ரிஷப ராசியில் பெயர்சியாக உள்ளார். அப்பொழுது மீன ராசிக்கு முழுமையாக ஏழரை சனி காலம் முடிவுக்கு வரும்.

வரும் ஜூன் 3ஆம் தேதி மேஷ ராசியில் சனி பகவான் நுழைவு உள்ளதால் ஜென்ம சனி தொடங்கப் போகிறது. இதன் காரணமாக மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இவர்களுக்கு அமையும். இது ஏழரை சனியின் முக்கியமான மற்றும் இரண்டாம் கட்டமாக இருப்பதால் இவர்கள் இருக்கக்கூடிய முடிவுகள் மற்றும் செயல்பாடுகளில் கவனம் தேவை. முழுக்கத்துடனும் சரியான திட்டமிடலுடன் புதிய செயல்களை தொடங்குவது நன்மை தரும். இவர்களுக்கு 2032 மே 31 ஆம் தேதி மிதுன ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகும்போது ஏழரை சனி விலகும்.