தாய்லாந்து மோசமான மழை வெள்ள அபாயத்தை பாங்காக்பேரிடர் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

 

தாய்லாந்து பக்கம் யாரும் போயிடாதீங்க. மழை வெளுத்து வாங்குவதால், மொத்த தாய்லாந்தும் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. 2015ல் சென்னையில் கொட்டுன மாதிரி, இப்போ தாய்லாந்தை மழை பிரித்து எடுத்து வருகிறது. பாங்காக் முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. எனவே பாங்காக்கின் 50 மாவட்டங்களும் பேரிடர் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

பாங்காக்கில் நேற்று முன்தினம் மதியம் கிட்டத்தட்ட 48 மணி நேரத்திற்கும் மேல் கேப் இல்லாம மழை பெய்திருக்கிறது. 300 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது. 204 மி.மீக்கு மேல் மழை பெய்தால் ரெட் அலர்ட் குடுப்பாங்க. ஆனா.. தாய்லாந்துல 300 மி.மீக்கும் அதிகமா மழை பெய்திருக்கிறது. மின் புரி பகுதியில் 274.5 மி.மீ, கிளாங் சாம் வா பகுதியில் 273 மி.மீ அளவில் மிக மோசமாக மழை பெய்திருக்கிறது. கனமழை காரணமாக மொத்தமாக 50 மாவட்டங்களுக்கும் பேரிடர் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாங்காக் ஆளுநர் சட்சார்ட் நகரின் மொத்த மாவட்டங்களையும் பேரிடர் பகுதிகளாக அறிவித்திருக்கிறார். இந்த அவசரக் கால அறிவிப்பின் மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள உள்ளூர் நிர்வாக அமைப்புகள், பேரிடர் மேலாண்மை குழுக்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் எவ்வித தாமதமும் இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து.. மக்களுக்கு தேவையான நிவாரணங்களை மிக வேகமாகவும் ஒருங்கிணைந்தும் வழங்க சிறப்பு அதிகாரங்கள் கிடைத்திருக்கின்றன.

பாங்காக்கின் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் எல்லாம் வெள்ளத்தில் மிதக்கிறது. சோஷியல் மீடியாக்களில் வரும் வீடியோக்களில் கார்கள் மற்றும் வேன்கள் வௌத்தில் மிதப்பதையும் பொதுமக்கள், இடுப்பளவு தேங்கியிருக்கும் நீரில் மிதந்து போவதையும் பார்க்க முடிகிறது. நகரின் பிரதான கால்வாய்கள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அதன் வழியாக மழை வெள்ள நீர் வெளியேற முடியாமல் ரோட்டில் வெள்ளம் தேங்கியுள்ளது.

வெள்ளம் காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும் முக்கிய வழித்தடங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வெள்ள அபாயத்தை எதிர்க்கொள்ள பாங்காக் மாநகராட்சி சார்பில் 10 லட்சம் மணல் மூட்டைகள் தயார் செய்யப்பட்டு வீடுகள் மற்றும் கடைகளுக்குள் தண்ணீர் புகாமல் தடுக்க பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

சரி இத்துடன் எல்லாம் முடிந்தது என்று மக்கள் நிம்மதியடைந்திருந்த நிலையில், வானிலை மையம் பெரிய குண்டை தூக்கி போட்டிருக்கிறது. அதாவது நாளை தாய்லாந்தில் பரவலாக இடி, மின்னலுடன் மழை அடி வெளுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இப்போதைக்கு தாய்லாந்து பக்கம் போயிடாதீங்க மக்களே!