ஹார்முஸ் வழித்தடம் முடங்கியதில் இருந்து உலக நாடுகளுக்கு ஆபத்பாந்தவனாக இருந்து வரும் சவுதி அரேபியாவின் செங்கடல் வழியாக நடக்கும் சப்ளை தற்போது ஹவுதி படைகளின் தாக்குதல் காரணமாக மொத்தமாக முடங்கியுள்ளது.
சவுதி அரேபியாக தனது எண்ணெய் சப்ளையை கிழக்கு – மேற்கு பைப்லைன் வழியாக கிழக்கு பகுதியில் இருக்கும் Abqaiq எண்ணெய் வயலில் இருந்து மேற்கு பக்கம் இருக்கும் யான்பு துறைமுகம் வரையில் இணைக்கப்படுகிறது
இந்த ஒரு பைப்லைன் மூலம் சவதி அரேபியா ஹார்முஸ் வழித்தடத்தில் மட்டும் அல்லாமல் செங்கடலிலும் சப்ளை செய்து வந்தது. தற்போது ஹவுதிக்கள் மதீனா அருகில் al-Mesabaah பகுதியில் இருக்கும் பைப்லைன் மீது டிரோன் மூலம் தாக்குதல் நடத்தி இந்த பைப்லைன் சப்ளையை மொத்தமாக நிறுத்தியது.
இதேவேளையில் ஹவுதி படைகள் யெமன் நாட்டின் மோகா துறைமுக நகரத்தை கைரப்பற்றியிருக்கும் காரணத்தால் சவுதி கப்பல் தாக்குதல் நடுத்த ஏதுவான பகுதியில் இருக்கும் நிலையில் யான்பு துறைமுகத்தில் கப்பலில் கச்சா எண்ணெய் லோட் செய்வதை நிறுத்தியுள்ளது சவுதி அரேபியா. 13ஆம் தேதி அதாவது தேதிக்கு பின்பு இந்த துறைமுகத்தில் எவ்விதமான லோடிங் பணிகளும் நடக்கவில்லை.
இதன் மூலம் ஐரோப்பாவுக்கு செல்லும் சவுதி அரேபியாவின் எண்ணெய் மொத்தமாக தடைபெற்றுள்ளது, மேலும் ஐரோப்பிய நாடுகளிடம் செப்டம்பர் மாத்திற்காக செய்யப்பட்ட ஆர்டர்களை செயல்படுத்த முடியாது என சவுதி ஆராம்கோ திட்டவட்டாமாக தெரிவித்துள்ளது.
இதனால் போலாந்து போன்ற நாடுகள் மாற்று கச்சா எண்ணெய் சப்ளையர் நாடுகளை தேடி வருகிறது, மேலும் சவுதியின் சப்ளை குறைந்துள்ள காரணத்தால் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை ரீடைல் சந்தையில் 120 டாலர் வரையில் உயரந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகள் காலம் காலமாக ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய், ஏரிபொருள் வாங்கி வந்த நிலையில் உக்ரைன் போர் வெடித்த பின்பு பைப்லைன் முடக்கப்பட்டு சப்ளை நிறுத்தப்பட்டது.
தற்போது சவுதி அரேபியா செங்கடலில் பயணித்து சூயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவுக்கு வரும் கச்சா எண்ணெய் மொத்தமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
ஹார்முஸ் முடங்கப்பட்ட 6 மாதங்களுக்கு உலக நாடுகளுக்கு பெரும் உதவியாக இருந்த கிழக்கு – மேற்கு பைப்லைன் தற்போது மொத்தமாக முடங்கியுள்ளது. இந்த வர்த்தக இழப்பை சமாளிக்கா சவுதி அரேபியாவும் dark shipments முறையை கையாளும் என தகவல் வெளியாகியுள்ளது, இந்த dark shipments வாயிலாகவே தற்போது வளைகுடாவில் இருந்து தினமும் 7-9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைக்கு வருகிறதாம்.



