மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 14 செப். 2026

 

மேஷம்: எதிர்பார்த்த பண வரவு இல்லாவிட்டாலும், சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினையில் இருந்து விடுபட, ஓயாமல் உழைப்பீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு, கூடும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

ரிஷபம்: வெளியூர் பயணம் அதிகரிக்கும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம்: மன இறுக்கம் குறையும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். கணவன் – மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து, செல்வாக்கு கூடும்.

கடகம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பல வகையிலும் பண வரவு கூடும். அதில் ஒரு பகுதியை சேமிப்பீர்கள். பழுதான சாதனங்கள், வாகனங்களை மாற்றுவீர்கள். பேச்சில் பொறுமை தேவை.

சிம்மம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர் பார்த்த விலைக்கே பழைய சொத்துகள் விற்பனையாகும். பெரிய மனிதர்கள், அரசு அதிகாரிகளின் நட்பும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

கன்னி: பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தினருடன் தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். அலுவலகத்தில் டென்ஷன் வந்துபோகும். தொடங்கிய பணிகள் சற்று தாமதமாகி முடியும். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

துலாம்: புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீண், ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தி, வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகளில் சாதகமான திருப்பம் ஏற்படும். பொருட்கள் சேரும்.

விருச்சிகம்: எதிர்பார்த்த தொகை தக்க சமயத்தில் கைக்கு வரும். நீண்ட காலத்துக்குப் பிறகு, குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் திரும்பும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையைக் கேட்டு நடப்பார்கள். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள்.

தனுசு: போட்டிகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும். உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பயணத்தால் ஆதாயம் உண்டு.

மகரம்: தவிர்க்க முடியாத செலவுகள், பயணங்கள் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும். பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும்.

கும்பம்: மனப் போராட்டங்கள் ஓயும். உங்களது சமயோசிதமான பேச்சால், தடைபட்டிருந்த வேலைகளை முடிப்பீர்கள். நவீன ரக வாகனம், மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பல வகையிலும் பொருட்கள் சேரும்.

மீனம்: பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாகனப் பயணத்தின்போது கவனம் தேவை. ஆன்மிகம், தியானத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ஆவணி 28 | திங்கள்கிழமை

திதி: திருதியை காலை 7.07 மணி வரை, பிறகு சதுர்த்தி.

நட்சத்திரம்: சித்திரை மதியம் 1.55 வரை, பிறகு சுவாதி.

நாமயோகம்: பிராம்யம் நண்பகல் 12.45 வரை, பிறகு மஹேந்திரம்.

நாமகரணம்: கரசை காலை 7.07 வரை, பிறகு வணிசை.

யோகம்: பிரபலாரிஷ்ட யோகம் மதியம் 1.55 வரை, பிறகு அமிர்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.

சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.

அஸ்தமனம்: மாலை 6.15.

ராகு காலம்: காலை 7.30-9.00

எமகண்டம்: காலை 10.30-12.00

குளிகை: மதியம் 1.30-3.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1,3

பரிகாரம்: தயிர்.