மேஷம்: திட்டமிட்ட வேலையை அலைந்து திரிந்து முடிப்பீர்கள்.மனைவி வழியில் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். பங்குதாரர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது.
ரிஷபம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் காணப்படுவீர். குடும்பத்தில் நிலவிய குழப்பம் விலகும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
மிதுனம்: எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். அலுவலகத்தில் உங்கள் தரம் ஒருபடி உயரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்.
கடகம்: சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவரின் நட்பு கிட்டும். சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கூடும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபார ரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருக்கவும்.
சிம்மம்: திட்டமிட்டபடி பணிகளை செய்து முடிப்பீர். உடன்பிறந்தோர் உதவிகரமாக இருப்பர். தம்பதிக்குள் ஈகோ பிரச்சினை தீர்ந்து நெருக்கம் கூடும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்க வேண்டி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு உண்டு.
கன்னி: குடும்பத்தினரிடம் பேசும்போது கவனம் தேவை. விவாதங்களை தவிர்க்கவும். மகனின் வேலை, மகளின் திருமணம் தொடர்பாக திடீர் பயணங்கள் வந்து போகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் பணிகளில் தேக்கம் ஏற்படும்.
துலாம்: ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்களின் ஆதரவு உண்டு. அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்: பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்கவும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.
தனுசு: மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.
மகரம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றுவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
கும்பம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர் பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வரும்.
ஆவணி 16 | புதன்கிழமை
திதி: பஞ்சமி காலை 6.13 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: பரணி பின்னிரவு 1.43 வரை. பிறகு கார்த்திகை.
நாமயோகம்: துருவம் இரவு 9.11 வரை. பிறகு வியாகாதம்.
நாமகரணம்: தைதுலம் காலை 6.13 வரை. பிறகு கரசை.
b காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5
யோகம்: சித்தயோகம் பின்னிரவு 1.43 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
சந்திராஷ்டமம்: சித்திரை.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.19.
ராகு காலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: தேய்பிறை
அதிர்ஷ்ட எண்: 3, 7
பரிகாரம்: பால்



