: கடந்த 2024-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் வெடித்த கலவரம் மற்றும் ஷேக் ஹசீனா ஆட்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, இந்தியா – வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், முடங்கியுள்ள இந்த சேவையை மீண்டும்
தொடங்குவது குறித்து விவாதிக்க இரு நாட்டு ரயில்வே அதிகாரிகளுக்கு இடையேயான இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டம் டாக்காவில் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் மைத்ரி, பந்தன் மற்றும் மிதாலி எக்ஸ்பிரஸ் ரயில்களை மீண்டும் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.



