கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை (8) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 31 ஆம் திகதி, மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று, அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தற்போது மட்டக்களப்பு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளின் பணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



