இந்த மூன்று ராசிகளுக்கு அபரிவிதமான லாபம் கிடைக்கும்

 

நவகிரகங்களின் தலைவனும், பிரகாசமான ஒரு கிரகமாக இருப்பது சூரியன் அவர், சிம்ம ராசியில் இருள் கிரகங்களில் ஒன்றான கேது உடன் இணைந்து வலிமையான சேர்க்கை நடக்க உள்ளது. இந்த கிரக சேர்க்கை காரணமாக சில ராசிகளின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் நிகழும். மனதளவில் தைரியமும், செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.

ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரிய பகவான் கடக ராசியில் இருந்து தனது சொந்த ராசியாக சிம்ம ராசியில் நுழைய உள்ளார். இங்கு ஏற்கனவே செஞ்சாலும் செய்து வரக்கூடிய கேது உடன் ஒரு அறிய சேர்க்கை நிகழ உள்ளது. சூரியன் மற்றும் கேதுவின் இணைவு சில ராசிகளின் வாழ்க்கையில் நல்ல தாக்கத்தையும், அவர்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் வெற்றியும், சமூகத்தில் மரியாதை, அந்தஸ்து உயர வாய்ப்பு உண்டு. எந்தெந்த ராசிகள் இந்த கிரக சேர்க்கையால் நன்மை பெறப்போகின்றன தெரிந்து கொள்வோம்.

சிம்ம ராசியிலேயே சூரியன் மற்றும் கேதுவின் மங்களகரமான சேர்க்கை நிகழ்வு உள்ளது. இதன் காரணமாக உங்கள் ராசிக்கு தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவம் பண்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழலும், சமூகத்தில் உங்கள் மீதான மரியாதை அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ள கூடிய பணிகளை புதிய இலக்கை எட்ட முடியும். இந்த நாட்களாக நிலுவிலிருந்து பணிகள் அனைத்தையும் எதிர்பார்க்க விதத்தில் முடிக்க முடியும்.

அதிர்ஷ்டமான சூழலில் இருக்கும் என்பதால் உங்கள் முயற்சிகளை அதிகப்படுத்துவோம். மேலும் உங்களுடைய முடிவு எடுக்கும் திறன் வலுவாக இருக்கும் என்பதால் கடினமான சூழ்நிலை கூட சிறப்பாக சமாளிக்க முடியும். நீண்ட நாட்களாக வேலை தேடக்கூடிய அன்பர்களுக்கு தகுதிக்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வெற்றிகரமான காலமாக அமையும்.

கன்னிய ராசி அன்பர்களுக்கு சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை நன்மைகள் அதிகரிக்க கூடியதாக இருக்கும்.உங்களுக்கு புரிய வருமான வாய்ப்புகள், வழிகள் திறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சில இடங்களில் இருந்து உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் தெரிய வரும். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும்.

தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய இந்த காலத்தில் மீது ஆதாயமும், உங்களுக்கு விருப்பமான சில வசதிகள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கலைத்துறையில் உங்களுக்கான அங்கீகாரம் மற்றும் புகழ் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முடிவு எடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும் என்பதால் வேலை, தொழில் தொடர்பாக முக்கிய வேலைகளை முடிப்பீர்கள். மேலும் புதிய முயற்சிகளை தொடங்கவும் வாய்ப்பு உண்டு.

மகர ராசி நண்பர்களுக்கு சூரியன் மற்றும் கேதுவின் சேர்க்கை நேர்மையான பலன்கள் அதிகமாக கிடைக்கக்கூடியதாக இருக்கும். குறிப்பாக நீங்கள் செய்யக்கூடிய தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக முன்னேற்றம் காணக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் நிறைவடைய வாய்ப்பு உண்டு. ஆன்மீகம் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். வணிகம் தொடர்பான பல முக்கியமான பணிகளை வெற்றிகரமாக முடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாள் கனவுகளுக்கு நிறைவேறும்..