இந்தியர் மீது வழக்கு அமெரிக்கா பீட்சா கடையில் போதைப்பொருள்

 

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தில் டினுபா பகுதியில் இந்தியரான கவல் ப்ரீத் சிங் என்பவர் பீட்சா கடை நடத்தி வந்தார். இந்நிலையில் உணவகத்தில் இருந்து அவர் சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்ததோடு, பெருமளவில் மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த மாதம் 18ம் தேதி ப்ரீத் சிங்கின் வீடு மற்றும் வணிக வளாகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 40பவுண்ட்க்கும் அதிகமான போதைப்பொருள், மூன்று துப்பாக்கிகள் மற்றும் 10ஆயிரம் அமெரிக்க டாலர் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ப்ரீத் சிங்கிற்கு போதைப்பொருள் கடத்தலுக்காக 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். மேலும் 10மில்லியன் அமெரிகக் டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.