கலிபோர்னியாவில் விமான விபத்து-உயிருக்குப் போராட்டம் நபர்கள்!

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வடமேற்கு ப்ரெஸ்னோ பகுதியில் சனிக்கிழமை பிற்பகலில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து தரைமட்டமாகி நொறுங்கி விபத்துக்குள்ளானது. குடியிருப்புப் பகுதிக்கு அருகில் நிகழ்ந்த இந்த கொடூர சம்பவத்தில் விமானத்தில் பயணித்த இருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ப்ரெஸ்னோ பகுதியில் உள்ள சியரா ஸ்கை பார்க் தனியார் விமான நிலையத்திற்கு அருகில் பிளைத் அவென்யூ ( பாதையில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. ஒற்றை என்ஜின் கொண்ட அந்தப் சிறிய ரக விமானம், வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென மின் கம்பிகள் மற்றும் மரங்களின் மீது மோதித் தரையில் வீழ்ந்து வெடித்தது. சம்பவ இடத்திலேயே இரு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த இரு பெரியவர்கள் ஆபத்தான நிலையில் கம்யூனிட்டி ரீஜனல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் உள்ளூர் தீயணைப்புத் துறை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

விமானம் மோதிய வேகத்தில் அப்பகுதியில் இருந்த மின்கம்பங்கள் சேதமடைந்ததால், சுமார் 1,700-க்கும் மேற்பட்ட வீடுகளில் தற்காலிகமாக மின் விநியோகம் தடைபட்டது. தகவலறிந்த ப்ரெஸ்னோ தீயணைப்புப் படை, காவல்துறை மற்றும் பசுபிக் கேஸ் & எலக்ட்ரிக் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விமானம் மோதியதால் ஏற்பட்ட சிறிய அளவிலான தீயைக் உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். மின் இணைப்புகள் தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்ட நிலையில், விபத்தில் பலியானவர்களின் விவரங்களை அறியக் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்துக்கான சரியான காரணம் என்ன என்பது உடனடியாகத் தெரியவராத நிலையில், அமெரிக்காவின் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்பு வாரியம்மற்றும் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவை இணைந்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளன. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறா அல்லது மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்தில் அதிகாரிகள் முதற்கட்ட ஆய்வுகளை முடுக்கிவிட்டுள்ளனர்.