மகளை பெண் கேட்ட இளைஞரின் முகத்தில் கொதிக்கும்எண்ணையை ஊற்றிய தாய் –

 

காதலியின் அம்மா சூடான எண்ணெய் ஊற்றிய சம்பவம்(புகைப்படங்கள்-
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தமீம் (36) கூலி வேலை செய்து வருகிறார். இவரது கணவர் இன்றி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் நட்சத்திர 18-வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஒச்சேரி அடுத்த ஆயர்பாடி ரோட்டு தெருவைச் சேர்ந்த லோகேஷ் கண்ணன் (19). இவர் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதனிடையே லோகேஷ் கண்ணன் மற்றும் தமீம் மகளும் நட்சத்திர கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் லோகேஷ் கண்ணன் காவேரிப்பாக்கத்தில் உள்ள தனது காதலி வீட்டிற்கு இரவு வந்துள்ளார்.

 

முகத்தில் கொதிக்கும் எண்ணையை ஊற்றிய தாய்
அப்போது லோகேஷ் கண்ணன் தனது காதலியின் அம்மாவிடம் உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த தமீம் சமையல் அறைக்கு சென்று கடாயில் எண்ணை ஊற்றி காயவைத்து சூடான எண்ணையை எடுத்து வந்து, லோகேஷ் கண்ணன் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது .

இதில் லோகேஷ் கண்ணன் முகம், கழுத்து, மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் லோகேஷின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு வாலாஜாபேட்டை அரசு. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு லோகேஷ்சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காவேரிப்பாக்கத்தில் அரங்கேறிய கொடூரம்
இதுதொடர்பாக லோகேஷ் நேற்று இரவு காவேரிப்பாக்கம் போலிசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ரகுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.