2001-ம் ஆண்டு செப்​.11-ம் தேதி இரட்டைக் கோபுர தாக்குதல் முன்பே எச்சரித்த வெள்ளை மாளிகை

 

அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் கடந்த 2001-ம் ஆண்டு செப்​.11-ம் தேதி, அல்​காய்தா தீவிர​வா​தி​கள் 2 பயணி​கள் விமானத்தை கடத்​திச் சென்று அங்​கிருந்த இரட்டை கோபுர கட்​டிடங்​கள் மீது மோதினர். இதில் அந்​தக் கட்​டிடங்​கள் தீப்​பிடித்து எரிந்து இடிந்து தரைமட்​ட​மானது.

இந்த சம்​பவத்​தில், அந்​தக் கட்​டிடத்​தில் இருந்​தவர்​கள் மட்​டுமல்​லாது, 19 தீவிர​வா​தி​கள், 300 தீயணைப்பு வீரர்​கள் உட்பட மொத்​தம் 2,996 பேர் உயி​ரிழந்​தனர். இச்​சம்​பவத்​துக்​கு,

ஒசாமா பின் லேடனின் அல் காய்தா தீவிர​வாத அமைப்பு பொறுப்​பேற்​றது. இதையடுத்து பாகிஸ்​தானில் பதுங்கி இருந்த ஒசாமா பின் லேடன், அமெரிக்க ராணுவத்​தால் 2011 மே 2-ம் தேதி சுட்​டுக் கொல்​லப்​பட்​டார்.

இந்​நிலை​யில், இத்​தாக்​குதல் சம்​பவம் குறித்​து, ஒரு வாரத்​துக்கு முன்பே வெள்ளை மாளி​கைக்கு எச்​சரிக்கை தகவல் வந்​த​தாக இப்​போது தகவல் வெளி​யாகி உள்​ளது. குறிப்​பாக, இச்​சம்​பவத்​துக்கு ஒரு வாரம் முன்பு அப்​போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், வெள்ளை மாளி​கை​யின் முக்​கிய அதி​காரி​களு​டன் அல்​-​காய்தா தீவிர​வாத அமைப்​பின் செயல்​பாடு​கள் குறித்து ஆலோசனை நடத்தி உள்​ளார்.

இந்​தக் கூட்​டத்​தில் பங்​கேற்ற வெள்ளை மாளிகை அதி​காரி ரிச்​சர்ட் ஏ. கிளார்க், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் காண்​டலீசா ரைஸுக்கு தனிப்​பட்ட குறிப்பு ஒன்றை அனுப்​பி​னார். அதில், அமெரிக்​கர்​களைக் கொல்ல அல்​-​காய்தா ஒரு​போதும் தயங்​காது என்று எச்​சரித்​திருந்​தார்.

மேலும், இத்​தாக்​குதலுக்கு ஒரு வாரத்​துக்கு முன்​பு, அல்​-​காய்​தாவை எதிர்​கொள்​வ​தில் அமெரிக்கா தீவிர​மாக இருக்​கிறதா என்று கிளார்க், ரைஸிடம் கேள்வி எழுப்​பி​யிருந்​தார். முந்​தைய ஆண்​டில் ஏமனில் யுஎஸ்​எஸ் கோல் கப்​பல் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலுக்கு பதிலடி கொடுக்​க​வில்லை என்​ப​தை​யும் அவர் சுட்​டிக்​காட்​டி​னார். இதனால் அல்​-​காய்​தாவுக்​கும், தலி​பான்​களுக்​கும் மேலும் துணிச்​சல் ஏற்​படலாம் என்​றும், அமெரிக்​கர்​களைக் கொன்​றாலும் அதற்​காக எந்த விலை​யும் கொடுக்க வேண்​டி​யிருக்​காது என்று அந்த அமைப்​பு​கள் கருதக்​கூடும் என்​றும் அவர் எச்​சரித்​தார்.

இந்​தத் தாக்​குதல் தொடர்​பான விசாரணை ஆணை​யத்​திடம் காண்​டலீசா ரைஸ் அளித்த வாக்​குமூலத்​தில், கிளார்க் அனுப்​பிய குறிப்பு ஒரு ‘நல்ல எச்​சரிக்​கை’ என்​று தான்​ கரு​தி​ய​தாக தெரிவித்​துள்​ளார்​.