உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது மறைவு குறித்த செய்தியை அவரது சகோதரியின் மகனான பிரையன் சீவர் டோலி பார்ட்டனின் உத்தியோகபூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களின் ஊடாக உறுதிப்படுத்தியுள்ளார்.சமூக மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கேற்றல்
அவர் குறுகிய காலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அவரது பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ஏழு தசாப்த கால நீண்ட இசைப் பயணத்தைக் கொண்ட டோலி பார்ட்டன், உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான இசைத் தட்டுகளை விற்பனை செய்து சாதனை படைத்தவர்
“Jolene”, “I Will Always Love You” மற்றும் “9 to 5” உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற காலத்தால் அழியாத பாடல்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.
தன்னை எப்போதும் ஒரு ‘பாடலாசிரியை’ என்றே அடையாளப்படுத்திக் கொண்ட இவர், பாடல் எழுதுவதைத் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் வடிகாலாகவும், மன அமைதிக்கான ஒரு வழியாகவும் கருதியதாகப் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
இசைத் துறையைத் தாண்டி நடிப்பு, வணிகம் மற்றும் தொண்டு நிறுவனச் செயற்பாடுகளிலும் அவர் தடம் பதித்துள்ளார்.
குறிப்பாக, இவர் தொடங்கிய ‘Imagination Library’ எனும் அமைப்பின் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு இலவசமாகப் புத்தகங்களை வழங்கிப் பாராட்டுப் பெற்றார்.
இசை, சமூகம் மற்றும் கலைத்துறைக்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்புகளுக்காக என்றும் நினைவுகூரப்படும் டோலி பார்ட்டனின் மறைவு, சர்வதேச இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது.



