ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் நான்கு ஆண்டுகள் நீடித்து வந்தபோதிலும் தற்போது மீண்டும் வலுவடைந்து வருகின்றது. இருநாடுகளும் பயங்கர தாக்குதலை முன்னெடுத்து வருகின்றன. உக்ரைனின் வான் பாதுகாப்பு இருப்பை குறைப்பதற்காக ரஷ்யாபாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் தலைநகரான கீவ் மீது நேற்று அதிகாலை வரை வான்வழித் தாக்குதலை நடத்தியது. கீவ்வின் டார்னிட்ஸ்கி, ஸ்வியாடோஷின்ஸ்கி மற்றும் சொலோமியான்ஸ்கி மாவட்டங்களில் உள்ள 12 இடங்களில் இந்த தாக்குதல்கள் நடந்தன.
இதில் குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவ மையம் மற்றும் கல்வி நிறுவனம் உள்ளிட்டவை சேதடைந்தன. அவசரகால மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளுக்கு அடியில் இருந்து மக்களை மீட்டனர். சோலோமியான்ஸ்கி மாவட்டத்தில் 9 மாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் மேல் இரண்டு தளங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த தாக்குதல்களில் மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர்.



