இந்தியாவின் முறைகேடு- நாய் வந்து முறைப்பாடு..!

இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் குறைகேட்கும் கூட்டம் நடைபெற்றது.

இதில், தெருநாய் பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்க, கந்த்வா மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தீபக் ரத்தோர் வந்திருந்தார். அவருடன், நாய் வேடம் அணிந்த ஒருவரும் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய ரத்தோர், “நகரில், தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநகராட்சியின் நாய் கருத்தடை திட்டத்தில் ரூ.40 லட்சம் முறைகேடு நடந்துள்ளது” என்று குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், தெருநாய் பிரச்சனை குறித்து புகார் தெரிவிக்க, நாய் வேடமணிந்து ஒருவர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது