விகாரை மரத்தில் தொங்கிய வெளி நாட்டவரின் சடலம் ?வவுனியாவில் மரத்தில் இருந்து வீழ்ந்து

திக்கோவிட்ட விகாரையில் 54 வயது ஸ்காட்லாந்து நாட்டவரின் சடலம் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மாத்தறை, திக்கோவிட்ட பலோல்பிட்டியாவில் உள்ள ஒரு விசாரையில், 54 வயதான ஸ்காட்லாந்து நாட்டவர் ஒருவர் வேப்பமரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு ஜோடி காலணிகள், ஒரு மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் மற்றும் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஒரு ஸ்கூட்டர் ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளன.

ஹம்பாந்தோட்டைக்கு புறப்படுவதற்கு முன்பு, அந்த நபர் வெலிகம, மிடிகமவில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து ​பொலிஸார் விசாரித்து வருகின்றனர்

வவுனியாவில் மரத்தில் இருந்து வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்..!

வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மரம்வெட்டும் தொழிலை மேற்கொள்கின்ற குறித்த நபர் இன்றையதினம் நொச்சிமோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தவறுதலாக மரத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஓமந்தை பகுதியை சேர்ந்த குமார் வயது 45 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.