மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 14-ஆகஸ்ட் 2026

 

 

மேஷம்: மனதுக்கு இதமான செய்தி வரும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வராது என்றிருந்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிப்படையான பேச்சால் தடைகள் உடைபடும். பிள்ளைகளின் போக்கில் மகிழ்ச்சியுண்டு.வியாபாரத்தில் பணியாட்களை மாற்றுவீர். அலுவலகத்தில் மேலதிகாரி உதவுவார். சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்.

மிதுனம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டுதன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

கடகம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. மனதில் இருந்த பயம்விலகும். பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும். ஓரளவு லாபம் பார்க்கலாம்.

சிம்மம்: முன்கோபத்தை குறைப்பீர். மகனின் வேலை, மகளின் திருமணம் என்று அலைச்சல் இருக்கும். பல வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்க வேண்டிவரும். வியாபாரப் போட்டியை சமாளிப்பீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். மேலதிகாரி ஆதரிப்பார்.

கன்னி: புது எண்ணங்கள் மனதில் உதிக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சகோதர வகையில் உதவி கிட்டும். விரும்பியபொருட்கள் வாங்கி வீட்டை அலங்கரிப்பீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

துலாம்: எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சி உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும்.வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்: பழைய மகிழ்ச்சிகரமான நினைவுகளில் மூழ்குவீர். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர்.

தனுச: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து தீவிர யோசனையில் இருப்பீர். பிரியமானவர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்.

மகரம்: தம்பதிக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினையை தீர்க்க முயற்சி மேற்கொள்வீர். பேச்சில் கவனம் தேவை. வாகனம் செலவு வைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். வியாபாரத்தில் நிதானம் தேவை. பங்குதாரரின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நல்லது.

கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் உண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

மீனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குழப்பம் நீங்கி குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

ஆடி 29 | வெள்ளிக்கிழமை

திதி: துவிதியை மாலை 6.47 வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: பூரம் நாளை அதிகாலை 3.42 வரை. பிறகு உத்திரம்.

நாமயோகம்: பரிகம் காலை 9.28 வரை. பிறகு சிவம்.

நாமகரணம்: பாலவம் காலை 7.40 வரை. பிறகு கௌலவம்.

நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6.

யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: அவிட்டம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.56 மணி.

அஸ்தமனம்: மாலை 6.30 மணி.

ராகு காலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மதியம் 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 9

பரிகாரம்: வெல்லம்