ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கு ஈரான் பல நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, கடந்தகால போர்கள், தாக்குதல்கள் மற்றும் மோதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு ஈரான் இழப்பீடு வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.
ட்ரம்பின் இந்தக் கோரிக்கையால் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பான உடன்பாடு எட்டப்படுவதற்கான வாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் தாக்கமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
நேற்று மசகு எண்ணெய் விலை சுமார் 5 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து, இன்று பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை சுமார் 88 டொலரை அண்மித்துள்ளதுடன், WTI ரக மசகு எண்ணெயின் விலையும் 82 டொலருக்கு மேல் உயர்ந்துள்ளது.
உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளமை, சந்தையில் விநியோகத் தட்டுப்பாடு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அமெரிக்கா ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றமும் அல்லது பின்னடைவும் சர்வதேச எண்ணெய் விலையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.



