சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகையுடன் 4 ஆண்டாக பாலியல் இயக்குனர் கைது:

 

சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி இளம் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டிய பிரபல பாலிவுட் இயக்குனர் 40 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான சகீல் நூரானி (73), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம் நடிகை ஒருவருக்கு பட வாய்ப்பு தருவதாகக் கூறி மாலவானியில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்தார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், அந்த கொடூர சம்பவத்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு, இது குறித்து வெளியே கூறினாலோ அல்லது போலீசில் புகார் அளித்தாலோ வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

இந்த வீடியோவை வைத்து கடந்த 4 ஆண்டுகளாக அந்த நடிகையை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சகீல் நூரானி, நடிகை கர்ப்பமடையாமல் இருக்க கட்டாயப்படுத்தி மாத்திரைகளையும் கொடுத்து கருச்சிதைவு ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட நடிகை அளித்த புகாரின் பேரில் மாலவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், 40 நாட்களாக தலைமறைவாக இருந்த சகீல் நூரானியை மேதாவில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 12ம் தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டது.