வீட்டில் பூரான் வராமல் தடுக்க இந்த 5 டிப்ஸ் !

 

வீட்டின் சமையலறை மற்றும் குளியலறையில் இரவு நேரங்களில் வேகமாக ஓடும் பூரான்கள் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்கும். மழைக்காலத்தில் பூரான் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும். இப்பிரச்சனைக்கு சில எளிய வீட்டு குறிப்புகள் பின்பற்றுவது மூலம் பூரான் உள்ளிட்ட பல பூச்சிகள் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்

மழைக்காலம் தொடங்கியவுடன் பல வீடுகளில் சமையலறை, குளியலறை, சிங்க் அருகில், சுவர் ஓரங்கள் போன்ற இடங்களில் பூரான்கள் வேகமாக ஓடுவதை பார்த்திருப்போம். இவை பார்ப்பதற்கு பயங்கரமாக தெரிவதோடு அலட்சியமாக இருந்தால் ஆபத்தானதாகவும் மாறக்கூடும். அவை காதில் நுழையலாம் அல்லது தோலை கடிப்பது போன்ற சாத்தியங்கள் உள்ளன. அத்தகைய சூழலில் அலர்ஜி மற்றும் சரும எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

1. வினிகர் கலந்த நீரில் தரையை துடைக்கவும்ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கப் வெள்ளை வினிகரை கலந்து, பூரான்கள் அதிகம் நடமாடும் சமையலறை, குளியலறை, சிங்க் அருகில் மற்றும் சுவர் ஓரங்களை நன்றாக துடைக்க வேண்டும். வினிகரின் கடுமையான அமிலத்தன்மை மற்றும் வாசனை பூரான்களை தடுத்து, அவை அந்தப் பக்கமே வராமல் தடுத்துவிடும். மேலும், தரையைச் சுத்தமாக பராமரிக்கவும், கிருமி நீக்கம் செய்யவும் உதவும்.

2. வேப்ப எண்ணெய் மற்றும் கற்பூரம் கலவை தெளித்தல்

வேப்ப எண்ணெயுடன் கற்பூரத்தை கலந்து வீட்டின் மூலை முடுக்குகள், குளியலறை மற்றும் வடிகால்களுக்கு அருகில் தெளிக்க வேண்டும். வேப்ப எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூச்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை பூரான்களின் நுகரும் சக்தியைப் பாதித்து உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேற்றும்.

குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ளவை ரசாயன பூச்சிக்கொல்லிகளை போல் நச்சுத்தன்மை வாய்ந்தது அல்ல என்பதால், வீடுகளில் குழந்தைகள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் இருந்தாலும் தாரளமாக பயன்படுத்தலாம்.

வீட்டில் ஈரப்பதம் அதிகமாக இருப்பது, குளியலறை மற்றும் சமையலறையில் தண்ணீர் தேங்குவது,சுவர் அல்லது தரையில் விரிசல்கள் இருப்பது, சிங்க் கீழ் ஈரமான பொருட்களை வைப்பது மற்றும் கரப்பான் பூச்சி, எறும்பு, சிலந்தி போன்ற பூச்சிகள் அதிகமாக இருப்பதும் முக்கிய காரணங்கள் ஆகும். ஒரு சில பழக்கவழக்கங்களை பின்பற்றினால் வீட்டிற்குள் பூரான்கள் நுழைவதை தடுத்திட முடியும்

பூரான்கள் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களையே விரும்பும். எனவே குளியலறை, சமையலறை மற்றும் பாத்திரம் கழுவும் சிங்க் பகுதியை எப்போதும் காய்ந்த நிலையில் பராமரிக்கவும். குழாய்களில் தண்ணீர் கசிவு இருந்தால் உடனே சரிசெய்யவும்.

சுவர், ஜன்னல், கதவு ஓரங்கள் அல்லது குழாய்கள் செல்லும் இடங்களில் உள்ள சிறிய விரிசல்கள் வழியாக பூரான்கள் வீட்டிற்குள் நுழையலாம். எனவே அந்த இடைவெளிகளை சிமெண்ட் அல்லது சிலிகான் சீலண்ட் கொண்டு அடைப்பது நல்லது.

பாத்ரூம் மற்றும் வாஷ் பேசின் வடிகால் துவாரங்களில் முறையான வலைகள் அல்லது மூடிகளை பயன்படுத்தவும். குறிப்பாக இரவு நேரங்களில் இவற்றை மூடி வைப்பது நல்லது. பூரான்கள் இருட்டாக மற்றும் ஈரப்பதமாக இருக்கும் குழாய்களில்தான் அதிகளவில் வாழும். இரவுக் நேரங்களில்தான் அவை உணவை தேடி வெளியே வரலாம்

​பூரான்கள் சிறிய பூச்சிகளான கரப்பான் பூச்சிகள், எறும்புகள் மற்றும் சிலந்திகளை உணவாக உட்கொள்ளும். எனவே வீட்டில் மற்ற பூச்சிகள் தொல்லை இல்லாமல் சுத்தமாக வைத்திருந்தால் பூரான்கள் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறையும். பூச்சி நடமாட்டத்தை குறைக்க தினமும் சிங்க் சுத்தம் செய்யுங்கள், குப்பைகளை அப்புறப்படுத்துங்கள்.

பூரான்கள் ஈரப்பதம் அதிகம் உள்ள சூழலில் நன்றாக வளர்கின்றன. வீட்டில் உள்ள ஈரப்பதத்தைக் குறைப்பது, தண்ணீர் கசிவுகளை சரிசெய்வது, நுழையும் விரிசல்களை அடைப்பது மற்றும் வீட்டைச் சுத்தமாகப் பராமரிப்பது போன்ற தடுப்பு முறைகளே நீண்ட காலத்திற்குப் பூரான் தொல்லையிலிருந்து நிரந்தரத் தீர்வைத் தரும் என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.