2024 ஆகஸ்ட் மாதம் படகு சேவை மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்திய அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த நிதியுதவியை வழங்குகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதிலும், மக்கள்-to-மக்கள் தொடர்பு திட்டதை வலுப்படுத்துவதிலும் இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நீடிப்பு வெளிப்படுத்துகிறது.
இந்த நிதியுதவி Viability Gap Funding (VGF) எனப்படும் செயல்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 300 மில்லியன் இலங்கை ரூபாய் நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
பயணிகளுக்கு சேவை கட்டணத்தை மலிவாக வைத்திருப்பதுடன், படகு சேவையின் தொடர்ச்சியான செயற்பாடு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக முக்கியமான தளவாட மற்றும் செயற்பாட்டு செலவுகளை ஈடுசெய்யும் வகையில், கடந்த ஆண்டைப் போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்படுகிறது.
2024 ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்தப் படகு சேவை மூலம் சுமார் 52,000 பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கலாசார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.


