மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 05 -ஆகஸ்ட் 2026

 

மேஷம்: கையிருப்பு கரையக் கூடும். பிள்ளைகளின் உடல்நிலை லேசாக பாதிக்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நன்மை தரும்.

ரிஷபம்: அடுக்கடுக்காக வந்த செலவுகள் குறையும். சவாலான காரியங்களையும் திட்டமிட்டு முடிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள்.

மிதுனம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராக பேசி காரியம் சாதிப்பீர். சேமிக்கும் அளவுக்கு வருவாய் கூடும். பழுதான சாதனங்களை மாற்றுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும்.

கடகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பூர்வீக சொத்தை விற்பீர். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் அறிமுகம் கிட்டும். வியாபார நல்ல லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

சிம்மம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர். சில வேலைகளை முடித்துவிட்டோம் என மன நிம்மதியுடன் இருப்பீர். பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர். பணவரவு உண்டு. வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.

கன்னி: குடும்ப உறுப்பினர்களுடன் விவாதம் வரும். புதிய சிந்தனைகள் தோன்றும். மனைவி, பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டவும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

துலாம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக் கூடும். மூத்த சகோதர, சகோதரிகள் பண உதவி செய்வார்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும்.

விருச்சிகம்: குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். பணவரவு திருப்தி தரும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

தனுசு: பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். வெளி வட்டாரத்தில் மதிப்பு கூடும். பழைய நினைவுகளில் மூழ்குவீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர்.

மகரம்: வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர். வர வேண்டிய பணம் கைக்கு வரும். புதியவர்களின் அறிமுகம் கிட்டும். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்: எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் வந்து சேரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கை யாளர்களை கவருவீர். அலுவலகத்தில் உங்கள் தரம் ஒருபடி உயரும்.

மீனம்: தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.

பராபவ – ஆடி 20 | புதன்கிழமை

திதி: சப்தமி இரவு 8.43 வரை. பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: அசுவனி இரவு 9.18 வரை. பிறகு பரணி.

நாமயோகம்: சூலம் மாலை 5.28 வரை. பிறகு கண்டம்.

நாமகரணம்: விஷ்டி காலை 9.27 வரை. பிறகு பவம்.

நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.

யோகம்: மந்தயோகம் இரவு 9.18 வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.

சந்திராஷ்டமம்: அஸ்தம்.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.55.

அஸ்தமனம்: மாலை 6.34.

ராகு காலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 7

பரிகாரம்: பால்