மேஷ ராசி அன்பர்களே! சிறப்பான காரியங்கள் நடக்கும் நாள். அலுவலகத்தில் உங்களுடைய பணிச்சுமை அதிகரிக்கும். மற்றவர்களின் விமர்சனங்கள் பாதிப்பை தரலாம். குடும்பத்தில் சில குழப்பங்கள் இருந்தாலும் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரம் சம்பந்தப்பட்ட முடிவுகளை நன்றாக ஆராய்ந்து யோசித்து செய்வது நல்லது. வியாபாரம் சிறப்பாக நடக்கும். விற்பனையும் அதிகரிக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நன்மைகள் அதிகரிக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வருமானம் பெருகும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கவலைகள் மறையும். இன்று உங்கள் பலம்: வேலை சம்பந்தப்பட்ட முடிவுகளை நிதானமாக எடுப்பீர்கள். உறவினர்கள் உங்கள் தேவைக்கு உதவலாம். குடும்பத்தினர் பாசத்தோடு இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் வரலாம். பண பற்றாக்குறை உண்டாகலாம். வெளிநாட்டு செய்தி தாமதமாகும். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 எந்த வேலையாக இருந்தாலும் தாமதப்படுத்தாதீர்கள். 2 வேலை இடத்தில் கவனம் தவறாதீர்கள். 3 தொழிலாளர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அதிர்ஷ்ட எண்கள்: 5, 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல் வழிபட வேண்டிய தெய்வம் : முருகன்
ரிஷப ராசி அன்பர்களே! சிறப்பான பலன்கள் கிடைக்கும் நாள். தொழிலுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தாலும் பெரிய சிரமங்கள் எதுவும் இருக்காது. வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனித்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. வேலை இடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பதவி உயர்வுக்கான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடந்து வருமானம் அதிகரிக்கும்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெற்றி வாய்ப்பு கூடும்.
ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மை அடைவார்கள்
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யோக பலன் அதிகரிக்கும்.
இன்று உங்கள் பலம்:
நெருங்கிய நண்பரின் ஆதரவு கிடைக்கும். அரசு உங்கள் தொழிலுக்கு உதவலாம். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள்.
இன்று உங்கள் பலவீனம்:
குடும்பச் செலவுகள் அதிகரிக்கலாம். வியாபாரத்தில் இடையூறுகள் வரலாம். வெளியூர் பயணங்கள் தொந்தரவு தரலாம்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 கடன் கொடுப்பதாக வரும் செய்திகளை நம்ப வேண்டாம்.
2 பொறுப்போடு வேலைகளை செய்ய வேண்டும்
3 எந்த வேலையையும் ஒத்தி போடக்கூடாது.
அதிர்ஷ்ட எண்கள்: 2,9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகப் பெருமான்.
மிதுன ராசி அன்பர்களே! யோக பலன்கள் வந்து சேரும் நாள். குடும்பச் செலவுகளை சமாளிக்க முக்கிய முடிவு எடுப்பீர்கள். சகோதரர் வகையில் செலவுகள் உண்டாகலாம். வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும். வருமான அதிகரிப்பு மன நிம்மதி தரலாம். அலுவலகத்தில் முக்கிய வேலைகளை திட்டமிட்டு முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனை தீரும். குலதெய்வத்தினுடைய அருள் கிடைக்கும். மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு பெருகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவைகள் நிறைவேறும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேன்மைகள் உண்டாகும். இன்று உங்கள் பலம்: மிக நுட்பமாக பணத் தேவையை சமாளிப்பீர்கள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். மனைவியின் அனுசரிப்பு ஊக்கம் தரும்.. இன்று உங்கள் பலவீனம்: வியாபாரத்தில் ஏதாவது இடையூறுகள் வரலாம். திடீர் செலவுகள் ஏற்படலாம். அரசு உதவி தாமதமாகலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 ஆடம்பரமாக செலவு செய்யக் கூடாது. 2 வாகனங்களை அலட்சியமாக ஓட்டக்கூடாது. 3 வங்கி வரவு செலவுகளில் கவனமாக செயல்பட வேண்டும். அதிர்ஷ்ட எண்: 5 9 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, . வணங்க வேண்டிய தெய்வம்: சமயபுரம் மாரியம்மன்.
கடக ராசி அன்பர்களே! மிதமான நன்மைகள் கிடைக்கும் நாள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராக இருக்கும். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படலாம், என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம், குழந்தைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து எடுப்பது நல்லது. மற்றவர்களின் விமர்சனங்களும் தொல்லைகளும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும். எந்த விஷயத்திலும் பொறுமையை கடைப்பிடித்து நடப்பது நல்லது. புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை பளு அதிகரிக்கும் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய தாமதம் அடைவார்கள். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: தொழிலுக்குத் தேவையான உதவிகளை திரட்டுவீர்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கலாம். உறவினர்கள் பாசத்தோடு இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: அலைச்சல் அதிகமாகி சிரமத்தை கொடுக்கலாம் கடன் சுமை அதிகரிக்கலாம். வாகனப்பழுது உண்டாக்கலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. 2 அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி அளிக்காதீர்கள். 3 அந்நிய பெண்களிடம் நெருக்கம் காட்டாதீர்கள்.
சிம்மராசி அன்பர்களே! எதிர்பாராத நன்மைகள் வந்து சேரும் நாள். வெளிச்சம் வாக்கு அதிகரிக்கும். உங்கள் வார்த்தைக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்திற்கு ஏற்பட்ட மறைமுக தொல்லைகளும் விமர்சனங்களும் விலகும். குடும்பம் குழந்தைகள் தொடர்பான முக்கிய முடிவுகளை நன்றாக சிந்தித்து எடுப்பீர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்வாக்கு அடைவார்கள்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவைகள் நிறைவேறும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறப்புகள் கிடைக்கும்.
இன்று உங்கள் பலம்:
வெளிநாட்டு பயணத்தை செம்மையாக திட்டமிடுவீர்கள். நண்பரின் உதவி கிடைக்கலாம். அரசாங்க வேலைகள் நிறைவேறும்.
இன்று உங்கள் பலவீனம்:
வேலை இடத்தில் பணி அழுத்தம் கூடலாம். செலவுகளால் கையிருப்பு குறையலாம். குறிப்பிட்ட செயல்கள் தாமதமாகலாம்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 வீட்டை கவனமாக பூட்டி விட்டு செல்ல வேண்டும்.
2 அவசரப்பட்டு யாருக்கும் கடன் கொடுக்கக் கூடாது.
3 வெளியூர் பயணங்கள் தொந்தரவு தரலாம்.
அதிர்ஷ்ட எண்: 1,6
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: யோக நரசிம்மர்.
கன்னி ராசி அன்பர்களே! எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும் நாள். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல வருமானம் வரும். தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சி அடையும். குடும்பத்தில் சலசலப்பு வந்தாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. புதிய முதலீடு தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் நன்றாக சிந்தித்து பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகப் பணிகளில் கவனம் சிதற கூடாது. வியாபாரம் நல்ல லாபம் கொடுக்கும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் உதவி கிடைக்கும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன லாபம் பெறுவார்கள்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றி அடைவார்கள்
இன்று உங்கள் பலம்:
தொழில் நுட்பத்தோடு வியாபாரத்தை நடத்துவது. எதிர்ப்புகளை முறியடிக்கும் மன தைரியம்.
இன்று உங்கள் பலவீனம்:
குடும்ப சூழ்நிலையால் தடுமாற்றம் அடைவது. வேலை இடத்தில் சலசலப்பு ஏற்படுவது.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.
2 இடம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் கவனக்குறைவு கூடாது.
3 பணம் கொடுக்கல் வாங்கலில் அலட்சியம் கூடாது.
அதிர்ஷ்ட எண்: 1,9
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல், சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி.
துலாம் ராசி அன்பர்களே! அவசியமான காரியங்கள் தாமதமாக நடக்கும் நாள். வியாபாரத்தில் சில இடையூறுகள் ஏற்படலாம். வருமானக் குறைவு வரலாம். முக்கிய கடன்கள் சிரமத்தை கொடுக்கலாம். தொழில் சம்பந்தப்பட்ட முடிவுகளை நன்றாக ஆலோசித்து கவனமாக எடுப்பது நல்லது. வேலை இடத்தில் அக்கறையோடு நடக்க வேண்டும். மேலதிகாரிகளின் மனம் கோணாமல் பணியாற்ற வேண்டும். தொழிலுக்கு மறைமுக எதிர்ப்பு வரலாம்.
சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்.
சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலைப்பளு கூடும்.
விசாகம் நட்சத்திரக்காரர்கள் அலைச்சல் அதிகமாகும்.
இன்று உங்கள் பலம்:
சரியான வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
இன்று உங்கள் பலவீனம்:
வியாபாரத்திற்கு மறைமுக எதிர்ப்பு வரலாம். வெளியூர் பயணங்கள் சிரமத்தை கொடுக்கலாம்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 பற்று வரவு கணக்கில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
2 ஆன்லைன் மோசடிகளை நம்ப கூடாது.
3 பங்குப்பரிவர்த்தனைகளில் கவனமாக செயல்பட வேண்டும்
அதிர்ஷ்ட எண்: 6,3
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: பெருமாள்.
விருச்சிக ராசி அன்பர்களே! எதிர்பாராத பலன்கள் வந்து சேரும் நாள். முக்கியமான கடன்களை அடைப்பீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வியாபாரத்தின் வெற்றி பிரமிக்க வைக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் மனநிம்மதி உண்டாகும். நண்பர்களின் ஒத்தாசை உற்சாகம் தரும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். வேலை இடத்தில் உங்களின் பொறுப்பு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு ஊக்கம் கொடுக்கும். விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு வெற்றி கிடைக்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் செல்வம் அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரக்காரர்கள் வருமானம் உயரும். இன்று உங்கள் பலம்: சிக்கலான நேரத்தில் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் தொழிலுக்கு உதவலாம். குடும்பத்தினர் பாசத்தோடு இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் சிரமங்கள் வரலாம். பதவி உயர்வு தாமதமாகலாம். உறவினர்கள் தொந்தரவு கொடுக்கலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம். 2 ஆடம்பரமாக செலவு செய்யக் கூடாது. 3 வரவு செலவு கணக்கில் அலட்சியம் கூடாது. அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு வெள்ளை வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்.
தனுசு ராசி அன்பர்களே! எதிர்பாராத வரவு வந்து சேரும் நாள். எதிர்கால சேமிப்புக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். உறவினர்களின் பொறாமை உங்களுக்கு தொந்தரவு தரலாம். குடும்பம் சம்பந்தப்பட்ட முடிவுகளை நிதானமாக யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் மிகுந்த லாபம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பதவி உயர்வு, வேலை மாறுதல் கிடைக்கலாம். மூல நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல காரியங்கள் நடக்கும். பூராட நட்சத்திரக்காரர்கள் பண வரவு அதிகரிக்கும். உத்திரம் நட்சத்திரக்காரர்கள் தன லாபம் உண்டாகும். இன்று உங்கள் பலம்: வியாபார வெற்றிக்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். வெளிநாட்டு உதவி கிடைக்கலாம். குடும்பத்தினர் ஒத்தாசையாக இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வேலை இடத்தில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். வெளியூர் பயணங்களால் பயன் ஏற்படாது. கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். 2 அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கடன் கொடுக்கக் கூடாது. 3 குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும். அதிர்ஷ்ட எண்: 3,6 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம் வணங்க வேண்டிய தெய்வம்: தக்ஷிணாமூர்த்தி
மகர ராசி அன்பர்களே! அதிரடியான சம்பவங்கள் நடக்கும் நாள் இன்று. வேலை பார்க்கும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். உதவி செய்கின்ற மனநிலை உங்களுக்கு அதிகரிக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைத்து பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். வெளியூரிலிருந்து தொழிலுக்கு தேவையான உதவி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் ஏற்படும்.
உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வெற்றியடைவார்கள்.
திருவோணம் நட்சத்திரக்காரர்கள் நினைத்ததை முடிப்பார்கள்.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வாகனம் வாங்குவார்கள்.
இன்று உங்கள் பலம்:
துறுதுறுப்பாக இருக்கின்ற உங்கள் வேலை திறன் தொழிலை மேம்படுத்தும். தீர்க்கதரிசனமாக சிந்தித்து முடிவெடுப்பீர்கள்.
இன்று உங்கள் பலவீனம்:
இல்லை என்று சொல்லாமல் கையில் இருக்கின்ற காசை கேட்போரிடம் கொடுப்பீர்கள். யார் சொல்வதை எளிதாக நம்புவீர்கள்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்:
1 நாளை பார்த்துக் கொள்வோம் என்று வேலையை தள்ளிப் போடக்கூடாது.
2 வேலை இடத்தில் உயர் அதிகாரி பற்றி மற்றவரிடம் பேசக்கூடாது.
3 பிள்ளைகள் விஷயத்தில் கண்டிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.
அதிர்ஷ்ட எண்: 9,2
அதிர்ஷ்ட நிறம்: நீலம் சிவப்பு.
வணங்க வேண்டிய தெய்வம்: திருநள்ளாறு சனி பகவான்.
கும்ப ராசி அன்பர்களே! மிதமான பலன்கள் நடக்கும் நாள். எந்த காரியத்திலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறைமுக எதிர்ப்பும் தொல்லைகளும் விமர்சனங்களும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறு சலசலப்பு ஏற்படக்கூடும், என்றாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராக இருக்கும். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பாராத செலவுகள் வரலாம். சதயம் நட்சத்திரக்காரர்கள் வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் அசதி அதிகரிக்கும். இன்று உங்கள் பலம்: சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் உங்கள் தொழிலுக்கு உதவலாம். குழந்தைகள் பாசத்தோடு இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வியாபாரத்தில் சில சிக்கல்கள் வரலாம். பண வரவு குறையலாம். வெளியூர் பயணங்கள் தொந்தரவு தரலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 எந்தப் பணியையும் ஒத்தி போட வேண்டாம். 2 வேலைகளை மள மளவென்று செய்து முடிக்க பாருங்கள். 3 குடும்பத்தில் குழப்பம் இருந்தால் மனம் விட்டு பேசுங்கள். அதிர்ஷ்ட எண்: 8,3 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: குச்சனூர் சனி பகவான்.
மீன ராசி அன்பர்களே! புதிய வாய்ப்புகள் வருகின்ற நாள் இது. அலுவலகத்தில் உங்கள் பொறுப்பு அதிகரிக்கும். மேலதிகாரியின் பாராட்டு உற்சாகம் கொடுக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். குழந்தைகளும் குதூகலமாக இருப்பார்கள். மறைமுக தொல்லைகளும் விமர்சனங்களும் ஏற்படக்கூடும். அதையெல்லாம் தாண்டி வெற்றி பெறுவீர்கள். சில முக்கிய முடிவுகளை ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு செலவுகள் குறையும் உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு வெளியூர் பயணங்கள் நன்மை தரும். ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும். இன்று உங்கள் பலம்: எதிர்பார்த்த நல்ல செய்தி வெளியூரிலிருந்து வரும். அரசாங்க உதவி கிடைக்கலாம். மனைவி பிள்ளைகள் அன்போடு இருப்பார்கள். இன்று உங்கள் பலவீனம்: வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரலாம். பண பற்றாக்குறை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் சிரமத்தை தரலாம். கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: 1 இரவு நேரங்களில் வெளியில் தங்க வேண்டாம். 2 அலுவலகத்தில் குடும்பப் பிரச்சனையை பேச வேண்டாம். 3 எந்த வேலையும் ஒத்தி போட வேண்டாம். அதிர்ஷ்ட எண்: 8,5 அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள். வணங்க வேண்டிய தெய்வம்: மதுரை மீனாட்சி அம்மன்.
இன்றைய பஞ்சாங்கம் தேதி 9 – ஐப்பசி – பராபவ வருடம் திங்கள் நாள் திங்கள் திதி பௌர்ணமி (up to 9:41 am) பிரதமை (up to October 27, 7:02 am) நட்சத்திரம் அஸ்வினி (up to 5:41 pm) பரணி (up to October 27,3:39 pm) யோகம் சித்த யோகம் நல்ல நேரம் 6:15 – 7:15 am / 2:00 – 3:00 pm கௌரி நல்ல நேரம் 9:15 – 10:15 am / 7:30 – 8:30 pm இராகு காலம் காலை 7.30 – 9.00 எமகண்டம் காலை 10.30 – 12.00 குளிகை மதியம் 1.30 – 3.00 சூலம் கிழக்கு பரிகாரம் தயிர் சந்திராஷ்டமம் அஸ்தம், சித்திரை சூரியோதயம் 6:04 AM சூரிய அஸ்தமனம் 5:40 PM சந்திரோதயம் Oct 26 5:46 PM சந்திர அஸ்தமனம் Oct 27 6:53 AM



