.
நேற்று பெய்த கடும் மழையினால் அந்த வீட்டின் மீது மண்குன்று சரிந்து விழுந்ததாகவும், வீட்டுக்குள் இருந்த நால்வரும் அதில் சிக்கி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், நாவலப்பிட்டி, சோலங்கந்த பகுதியில் அமைந்திருந்த கடையொன்றின் மீது திடீரென மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவில் நாமல் – ரோஹித ராஜபக்சவின் பெயர்கள்..
சமூக ஊடகங்களில் பரவிவரும் சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவில் நாமல் – ரோஹித ராஜபக்சவின் பெயர்கள்..
6 பேர் பலி
இந்த விபத்துக்குப் பின்னர் நாவலப்பிட்டி – தொலஸ்பாகே (Dolosbage) வீதியின் 2ஆம் மைல் கல் அருகிலுள்ள பகுதி முழுமையாக போக்குவரத்துக்கு மூடப்பட்டது.
அதேவேளை, நேற்று மாலை வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஞானானந்தகம பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலத்தை கடந்து சென்ற 53 வயதுடைய நபர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மேலும், நேற்று மதியம் கினிகத்தேன பொலிஸ் பிரிவின் அம்பகமுவ பகுதியில் கனமழையால் நீரில் மூழ்கியிருந்த வீதியைக் கடக்க முயன்ற 45 வயதுடைய நபர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.



