மேஷம் முதல் மீனம் வரை- இன்றைய ராசிபலன்-நல்ல நேரம்- 28- ஜூலை -2026

 

மேஷம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர்.

மிதுனம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். காரியத்தடைகள் வரக்கூடும். எதிலும் நிதானமாக செயல்படவும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

கடகம்: அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு கூடும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். குழப்பங்கள் தீர்ந்து அலுவலகத்தில் நிம்மதியுண்டு. மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் இனி ஓடி வந்து பேசுவர். ஈகோ பிரச்சினை தீர்ந்து தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாண்டு பழைய வாடிக்கையாளர்களைக் கவருவீர்.

கன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

துலாம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தருவீர். தாய்வழி உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

விருச்சிகம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.

தனுசு: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ள வேண்டாம். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.

மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

கும்பம்: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். மகளுக்கு உடனே திருமணம் கூடி வரும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரி பாராட்டுவார். வியாபா ரத்தில் பாக்கி வசூலாகும். பணியாட்கள் ஆதரவு தருவர்.

மீனம்: திட்டமிட்ட வேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் யாரையும் குறை கூறாதீர்.

பராபவ – ஆடி 12 | செவ்வாய்க்கிழமை

திதி: சதுர்த்தசி மாலை 6.19 வரை. பிறகு பௌர்ணமி.

நட்சத்திரம்: பூராடம் மதியம் 1.11 வரை. பிறகு உத்திராடம்.

நாமயோகம்: விஷ்கம்பம் இரவு 11.32 வரை. பிறகு பிரிதி.

நாமகரணம்: வணிசை மாலை 6.19 வரை. பிறகு விஷ்டி.

நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.

யோகம்: சித்தயோகம் மதியம் 1.11 வரை. பிறகு பிரபலாரிஷ்டயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

சந்திராஷ்டமம்: மிருகசீரிஷம் மதியம் 1.11 வரை. பிறகு திருவாதிரை.

சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53.

அஸ்தமனம்: மாலை 6.37.

ராகு காலம்: பிற்பகல் 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 5, 9

பரிகாரம்: பால்

தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை