நேற்று இரவு சுமார் 10 மணியளவில் ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற Christopher Street Day (CSD) நிகழ்வின் போது கொடூரமான தாக்குதல் ஒன்று இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த தெரு ஊர்வலத்தின் நிறைவு நிகழ்வின் போது, பொதுமக்கள் கூட்டத்துக்குள் ஒரு வாகனத்தை செலுத்தியதால் ஒரு இளம் பெண் உயிரிழந்ததுடன், மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 21 வயதுடைய அப்துல் பி. (Abdul B.) என்பவரை பெர்லின் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அவரது புகைப்படத்தையும் பொலிஸ் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
சந்தேகநபர் ஆயுதம் ஏந்தியவராகவும் ஆபத்தானவராகவும் இருக்கக்கூடும். எனவே, அவரைக் கண்டால் எந்தச் சூழ்நிலையிலும் நேரடியாக அணுகவோ அல்லது தொடர்புகொள்ள முயற்சிக்கவோ வேண்டாம் என பொலிஸார் எச்சரித்திருக்கின்றர்கள்.
அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக 110 என்ற பொலிஸாரின் அவசர எண்ணைத் தொடர்புகொள்ளவும், அல்லது பெர்லின் பொலீஸ் அலுவலகத்தின் இணையதளம், தகவல் தொலைபேசி அல்லது அருகிலுள்ள ஏதேனும் பொலீஸ் நிலையத்தின் மூலம் தகவல் வழங்குமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
கொலைகாரர் 21 வயதான அப்துல் பி. முஸ்லிம் மதவாதக குழுக்களுடன் தொடர்பு கொண்டவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.



