எத்தனை நாட்கள் கோவிலுக்கு சென்றால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

 

கோவில் என்து தெய்வீக ஆற்றல்கள், ஆன்மீக அதிர்வலைகள் நிறைந்திருக்கும் ஒரு அபூர்வ சக்தி வாய்ந்த இடமாகும். அங்கு தினமும் சென்று வழிபடுவதால் நமக்கு பல விதமான நன்மைகள் கிடைப்பதாக ஆன்மீகத்தில் சொல்லப்படுகிறது. கோவில் வழிபாடு நன்மை தரக் கூடியது என அறிவியல் ஆய்வுகளும் சொல்கின்றன. ஆனால் அந்த பலன்களை அடைய நாம் தினமும் தொடர்ச்சியாக கோவிலுக்கு செல்கிறோமா என்றால் கிடையாது. கோவிலுக்கு தொடர்ச்சியாக எத்தனை நாட்கள் சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பெளர்ணமியில் எப்படி வழிபட்டால் என்ன பலன்_

கோவிலுக்கு சென்று வழிபடுவதால் மன அமைதி, நேர்மறை ஆற்றல் ஆகியவை அதிகரிக்கும் என சொல்லப்படகிறது. சுத்தமாக குளித்து விட்டு, தூய்மையான ஆடைகளை அணிந்து, மனதில் இறை பக்தியுடன் கோவிலுக்கு செல்லும் போது நம்முடைய மனதிலும், உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். மனம் தெளிவடையும். இதனால் தினமும் கோவிலுக்கு சென்று, இறை வழிபாட்டினை செய்ய வேண்டும் என இந்து மத சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் இன்றைய அவசர உலகில், இயந்திரமயமான நவீன காலத்தில் அனைவராலும் தினமும் கோவிலுக்கு சென்று வழிபட முடிவது கிடையாது.

கோவில் வழிபாடு :
திருமண நாள், பிறந்த நாள், ஏதாவது விசேஷங்கள், முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றின் போது தான் பெரும்பாலானவர்கள் கோவிலுக்கு செல்கிறார்கள். வாரத்தில் செவ்வாய், வெள்ளி, பிரதோஷம், ஏகாதசி, சஷ்டி, கிருத்திகை என குறிப்பிட்ட விரத நாட்களில் மட்டும் கோவிலுக்கு சென்று வழிபடுபவர்களும் உண்டு. ஆனால் ஒரு சிலர் மட்டுமே தினமும் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தினமும் எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும்? அப்படி செல்வதால் என்ன கிடைக்கும்? என சிலரது மனதில் கேள்விகள் எழுவது உண்டு. எத்தனை நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு சென்று வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றி ஆன்மீக சொல்லப்பட்டுள்ளது. இதுவரை இது பற்றி உங்களுக்கு தெரியாது என்றால் தெரிந்த கொள்ளலாம்

எத்தனை நாட்கள் கோவிலுக்கு சென்றால் என்ன பலன்?
* 7 நாட்கள் – 7 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு சென்றால் தடைப்பட்ட திருமணம் கைகூடும்.
* 9 நாட்கள் – 9 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு சென்று வழிபட்டால் உங்களை பிடித்த தரித்திரம் விலகிவிடும்.
* 11 நாட்கள் – 11 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு சென்று வழிபட்டால் கடன்கள் படிப்படியாக குறைய துவங்கும்.
* 15 நாட்கள் – 15 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு சென்றால், நினைத்தது அப்படியே நடக்கும்.
* 21 நாட்கள் – 21 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு சென்று வழிபட்டால் குழந்தை செல்வ வரம் கிடைக்கும்.
* ஒரு மாதம் – ஒரு மாதம் விடாமல் தொடர்ச்சியாக கோவிலுக்கு சென்றால், நீங்கள் தெரியாமல் செய்த பாவங்கள் விலகும்.
* ஒரு மண்டலம் – ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு சென்று வழிபட்டால் இந்த பிறவி எடுத்ததற்கான பலனை அடைய முடியும்.
* 108 நாட்கள் – 108 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு சென்று வழிபட்டால் தேவேந்திர பூஜை செய்த பலன் கிடைக்கும்.
* 1008 நாட்கள் – 1008 நாட்கள் தொடர்ந்து எவன் ஒருவன் விடாமல் கோவிலுக்கு செல்கிறானோ, அவனுக்கு அஸ்வமேத யாகம் செய்த முழு பலனும் கிடைப்பதுடன் முக்தியும் கிடைக்கும்.

100 நாட்கள், 1000 நாட்கள் எல்லாம் இடைவிடாமல் தொடர்ச்சியாக தினமும் கோவிலுக்கு சென்று வழிபடுவது சாத்தியமா? என சிலர் கேட்கலாம். இன்றைய கால கட்டத்தில் அது சற்று சிரமமான காரியம் தான். ஆனால் மன உறுதியுடனும், இறைவன் மீது கொண்ட பக்தி மற்றும் நம்பிக்கையுடன், விடாமுயற்சியாக கோவிலுக்கு செல்ல முயற்சி செய்யலாம். தொடர்ந்து எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்ல முடியுமோ அத்தனை நாட்கள் சென்று இறைவனை வழிபடலாம். தினமும் ஒரே கோவிலுக்கு தான் செல்ல வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. எந்த கோவிலுக்கு செல்ல முடிகிறதோ, அந்த கோவிலுக்கு செல்லலாம்.

எந்த பலனும் கிடைக்கவில்லையா?
“நானும் தினமும் கோவிலுக்கு செல்கிறேன்; ஆனால் எந்த நல்லதும் நடக்கவில்லை. கஷ்டம் மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது” என சொல்பவர்கள் முதலில் ஒன்றை தெளிவாக உணர வேண்டும். எந்த ஒரு செயலுமே உடனே பலன் தராது. ஒரு விதையை பூமியில் நட்டால் கூட, அது முளைத்து வருவதற்கு என்று ஒரு கறிப்பிட்ட காலம் உள்ளது. அது போல் நாம் செய்யும் இறை வழிபாட்டிற்கு உரிய பலன் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு முன் ஏற்கனவே நாம் பல பிறவிகளாக சேர்த்து வைத்திருக்கும் கர்மவினைகள் கரைய வேண்டும். பாவங்கள் குறையும் போது தான் இறைவனின் அருளும், புண்ணியத்திற்கான பலன் கிடைக்க துவங்கும்.