த்ரிஷா மகள் இஸ்ஸி நிஜத்தில் யார் மகள் தெரியுமா?

 

நடிகை த்ரிஷா உயிருக்கு உயிராக வளர்த்து வரும் மகள் இஸ்ஸி பற்றி இதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தை தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால். அதை கேட்ட ரசிகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

நடிகை த்ரிஷா வீட்டில் வளர்ந்து வரும் இஸ்ஸி கிருஷ்ணன் நிஜத்தில் யார் மகள் என்கிற ரகசியத்தை தெரிவித்துள்ளார் கட்டா குஸ்தி 2 ஹீரோ விஷ்ணு விஷால்.

த்ரிஷாவுக்கு நாய்கள் மீது எவ்வளவு பாசம் என்பது நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை. மகன் ஜோரோ இறந்த சோகத்தில் இருந்த த்ரிஷா கிருஷ்ணன் வாழ்வில் வந்ததது தான் இஸ்ஸி. அந்த செல்லம் இஸ்ஸி கிருஷ்ணனை தன் மகள் என்றே சொல்லி வருகிறார். இஸ்ஸியை த்ரிஷா வளர்க்கும் விதத்தை பார்க்கும் ரசிகர்களோ, பிறந்தால் த்ரிஷா வீட்டு நாயாக பிறக்கணும் என்கிறார்கள். இந்நிலையில் இஸ்ஸி பிறந்த கதையை சொல்லியிருக்கிறார் நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷாலும், ஐஸ்வர்யா லட்சுமியும் கணவன், மனைவியாக நடித்திருக்கும் கட்டா குஸ்தி 2 படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படம் குறித்து பேசியபோது தனக்கு நாய் வளர்ப்பது ரொம்ப பிடிக்கும் என பேசினார் விஷ்ணு விஷால். அப்பொழுது அவர் கூறியதாவது, நான் ஆசையாக வளர்த்து வரும் டெடி நாயின் மகள் தான் இஸ்ஸி கிருஷ்ணன். அதாங்க த்ரிஷா மகள். அவரும், என் மனைவியும் நெருங்கிய தோழிகள் ஆவர். இருவரும் சேர்ந்தால் நாய்கள் பற்றி பேசுவார்கள். இஸ்ஸி பற்றி இதுவரை நான் எங்கும் பேசியது இல்லை என்றார்.

விஷ்ணு விஷால் தெரிவித்ததை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, அடடே டெடிக்கும், இஸ்ஸிக்கும் இப்படியொரு உறவு இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. அப்படி என்றால் இஸ்ஸிக்கு இன்னொரு வீடும் இருக்கிறது என்கிறார்கள். த்ரிஷா மனமுடைந்து போயிருந்த நேரத்தில் அவருக்கு இஸ்ஸியை கொடுத்ததற்கு ரொம்ப நன்றி விஷ்ணு விஷால். இது அவருக்கு ரொம்ப பெரிய விஷயம். இஸ்ஸி வந்த பிறகே த்ரிஷா முகத்தில் மீண்டும் சந்தோஷத்தை பார்க்க முடிந்தது என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

த்ரிஷாவின் நாய் என்பதால் இஸ்ஸியை அனைவருக்கும் தெரியும். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இஸ்ஸி கிருஷ்ணனை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார்கள். அவ்வப்போது மகளுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் வெளியிடுவார் த்ரிஷா. மேலும் இன்ஸ்டா ஸ்டோரிகளிலும் த்ரிஷா உடன் இஸ்ஸியை பார்க்க முடிகிறது. இந்நிலையில் தான் த்ரிஷா வாழ்க்கையில் இஸ்ஸி வந்த கதை தெரிய வந்திருக்கிறது.