பாகற்காயில் பல சத்துக்கள் நிறைந்திருந்தாலும் அதன் கசப்புத்தன்மை காரணமாக பலர் இதை சாப்பிட மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகள் சாப்பிட விரும்புவது கிடையாது. ஆனால், சமைக்கும்போது சில டிப்ஸை ஃபாலோ செய்தால் குழந்தைகள் மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடும் வகையில் பாகற்காயை சமைக்க முடியும். இதில் கசப்பே இல்லாத பாகற்காய் வறுவல் ரெசிபியை பார்க்கலாம்.
வெங்காயம் – 1
பூண்டு – 10 பற்கள்
தக்காளி – 2
எண்ணெய் – தேவையான அளவு
மஞ்சள் – கால் டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
நல்லெண்ணெய் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப
பாகற்காயை நன்றாக கழுவி மெல்லிய வட்டங்களாக நறுக்கிவிட்டு மோரில் ஊறவைத்துகொள்ளவும். இது கசப்புத்தன்மை குறைக்க மிகச்சிறந்த வழியாகும்.
இப்போது அடுப்பில் கடாயை வைக்கவும். அதில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து நன்கு வெடித்தும் பூண்டு பற்களை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்
அதில் கடலை பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்துவிட்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும். அத்துடன் கறிவேப்பிலையும் சேர்த்து வதக்க வேண்டும்
வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி, மஞ்சள், மிளகாய் தூள் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
மசாலா பச்சை வாசனை மறைந்ததும் நறுக்கிய வைத்துள்ள பாகற்காயை சேர்க்கவும். மசாாலவுடன் நன்றாக சேரும் வகையில் தொடர்ச்சியாக வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கடாயை மூடி வைக்கவும். பாகற்காய் நன்கு வெந்து வதங்கியவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் மட்டும் ஊற்றி மீண்டும் வதக்கவும். அவ்வளவுதான் கசப்பு சுத்தமாக இல்லாத சுவையான பாகற்காய் வறுவல் ரெடி



