ஐரோப்பாவைப் பாதித்துள்ள கடும் வெப்பத்தின் காரணமாக, பிரான்சில் இரண்டு சிறு குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
அங்கு பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், நேர அட்டவணைகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை (22) பதிவான வெப்பநிலை வரலாற்றுச் சாதனைகளை முறியடித்துள்ளதாக பிரிட்டன் வானிலை முன்னறிவிப்பாளர்களும் கூறுகின்றனர்.
பிரான்சின் ஒயின் உற்பத்திப் பகுதியான போர்டோவில் வெப்பநிலை 41.9 டிகிரி செல்சியஸாக உயர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதிவான சாதனையை முறியடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய பிரான்சில் அமைந்துள்ள போய்ட்டியர்ஸில் வெப்பநிலை 41.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி, 1947-ல் பதிவான அதிகபட்ச வெப்பநிலையை முறியடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.




