கோடை வெயிலுக்கு இதமாக இளநீர் குடிக்க போறீங்களா? இந்த தவறை மட்டும் செய்துவிட வேண்டாம். ஏனென்றால் இளநீர் குடித்த 69 வயது நபருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தநபர் உயிரிழந்த நிலையில் அவரது சாவின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கோடை வெயில் கொளுத்த தொடங்கி உள்ளது.
சில இடங்களில் மழை பெய்தாலும் கூட பல இடங்களில் மதிய நேரங்களில் வெயில் என்பது கடுமையாக உள்ளது. இதனால் தற்போது பலரும் தர்பூசணி, ஜூஸ், இளநீர் உள்ளிட்டவற்றை அதிகமாக எடுத்து கொள்கின்றனர். மேலும் கண்டறிக வர்த்தக செய்திகள் சென்னை செய்திகள் விளையாட்டு செய்திகள்
அதாவது இளநீர் குடித்த 69 வயது முதியர் பரிதாபமாக இறந்துள்ளார். அவர் யார்? எப்படி இறந்தார்? இறப்புக்கு என்ன காரணம்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். டென்மார்க் நாட்டை சேர்ந்தவர் 69 வயது முதியர். இவர் தனது வீட்டில் வீட்டில் இருந்த இளநீரை எடுத்து அதில் இருந்த தண்ணீரை குடித்தார்.அதன்பிறகு சிறிது நேரத்தில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். அவரது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறியது. வாந்தி ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரை குடும்பத்தினர் மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
26 மணிநேரம் அவருக்கு மருத்துவ சிகிச்சை என்பது அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. அந்த நபர் மூளைச்சாவு அடைந்தார். அதன்பிறகு உயிர் பிரிந்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக சிகிச்சையில் இருந்த நபரிடம் டாக்டர்கள் விசாரித்தனர். அப்போது அவர் வீட்டில் இளநீர் குடித்ததாக தெரிவித்தார். இதனால் அவரது இறப்புக்கு இளநீர் குடித்தது தான் காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
‛‛டென்மார்க்கை சேர்ந்த 69 வயது நபர் முறைப்படி ப்ரிட்ஜ் உள்ளிட்டவற்றில்சேமித்து வைக்காத தேங்காயை எடுத்து இளநீர் என நினைத்து அதில் இருந்த தண்ணீரை குடித்துள்ளார். இந்த தேங்காய் என்பது டேபிளில் ஒரு மாதம் வரை உரித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த சமயத்தில் தேங்காய் கெட்டுப்போய்விட்டது. ஆனால் அதனை அறியாமல் அந்த நபர் தேங்காயில் இருந்து தண்ணீரை இளநீர் என எடுத்து குடித்துள்ளார்.
உடல்நலம் பாதிக்கப்பட் நபருக்கு மருத்துவமனையில்எம்ஆர் ஸ்கேன் மேற்கொள்ளப்பட்டது. அப்போது மூளையில்வீக்கம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அதற்கான காரணம் பற்றி அறிவதில் டாக்டர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. அதற்குள் அந்த நபர் மூளைச்சாவுஅடைந்தார். இதுபற்றி விசாரணையில் அந்த நபர் குடித்த இளநீர் தான் சாவுக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. அதாவது நாள்பட்டு கெட்டுப்போன தேங்காயில் இருந்து அவர் தண்ணீர் குடித்துள்ளார். தண்ணீர் துர்நாற்றம் அடித்துள்ளது. இதனால் அவர் சிறிய அளவில் மட்டுமே அந்த தண்ணீரை குடித்துள்ளார். அதன்பிறகு அவர் குடிக்கவில்லை. மேலும் துர்நாற்றம் வீசியதால் தேங்காயை உடைத்து பார்த்தபோது அது அழுகி இருந்தது. இதுபற்றி அவர் தனது மனைவியிடம் கூறியுள்ளார்.
தேங்காயை பொதுவாக 4 டிகிரி செல்சியஸ் முத் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். ஆனால் இந்த நபர் தோல் உரித்த தேங்காயை ஒரு மாதம் வரை டேபிளில் வைத்துள்ளார். அதன்பிறகு அந்த தேங்காயில் துளையிட்டு தண்ணீரை குடித்துள்ளார். அதில் இருந்த பூஞ்சயைால் அவர் இறந்து இறக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாள்பட்ட தேங்காய், இளநீரை மக்கள் குடிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் உயிர் கூட போய்விடும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.



