பாகன்களை பந்தாடிய யானை, மாமாவும் மருமகனும் மரணம்

 

இறக்குவானையில் இடம்பெற்ற பெரஹர ஊர்வலத்திற்காக அழைத்துவரப்பட்ட யானை ஒன்று, திங்கட்கிழமை (22) அன்று விகாரையில் வைத்து திடீரென மதம் பிடித்து கட்டுப்பாட்டை இழந்தது.

இந்தச் சம்பவத்தின்போது யானை தாக்கியதில், அதனைப் பராமரித்து வந்த, கித்துல்கலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பாகன்கள் (மாமனார் மற்றும் மறுமகன்) சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.